
சுற்றுலா செல்வது அனைவருக்குமே பிடித்த விஷயமாகும். குடும்பத்துடன் அவ்வபோது சேர்ந்து ரம்மியமான, அமைதியான இடங்களுக்கு சென்று மனதை relax செய்ய வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். சுற்றுலா சென்றுவிட்டு வருவது நமக்கிருக்கும் டென்ஷன், ஸ்ட்ரெஸ் போன்றவற்றை போக்க ஒரு சிறந்த வழியாகும். அதிலும் அழகான இடங்கள், இயற்கை சூழல், மியூசியம், கோவில் போன்ற இடங்களை பார்வையிடுவதற்கு மக்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு அதிகமான மக்களால் விரும்பி செல்லப்பட்ட 10 சுற்றுலாத்தலங்களைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம்.
பாரிஸ் என்றாலே காதலர்கள் தான் முதலில் நினைவிற்கு வருவார்கள். காதலர்களுக்கும், கலை ஆர்வம் அதிகம் கொண்டவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நகரம் இது. இங்குள்ள ஈபிள் டவர் முன்பு தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பது பல காதலர்களின் கனவாகும். மேலும் லூவ்ரே அருங்காட்சியகம் கலை ஆர்வலர்களை இங்கே ஈர்க்கிறது.
துபாய் என்றதும் ஆடம்பரம் தான் நினைவிற்கு வரும். வானுயற கட்டிடங்கள், பாலைவன சஃபாரி, பணத்தை தண்ணீராக இறைத்து செய்யப்படும் ஷாப்பிங்கள் என்று இங்கே இல்லாதது என்று எதுவுமேயில்லை என்பதால் மக்கள் இவ்விடத்திற்கு வருவதற்கு விரும்புகிறார்கள்.
ஹோய் ஆன் UNESCO உலக பாரம்பரிய தளமாகும். வியட்நாமின் கலாச்சாரம் மற்றும் உணவுகள், உலக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. குறைவான செலவில் ஒரு சிறந்த சுற்றுலா அனுபவத்தை பெற வேண்டும் என்று எண்ணுபவர்கள் வியட்நாமை நிச்சயம் தேர்வு செய்யலாம்.
வரலாற்றை பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம். வரலாற்று சிறப்புமிக்க கொலோசியம், பழமையான கட்டிடக்கலை இந்த நகரத்தை நோக்கி மக்களை இழுக்கிறது.
இயற்கையான சூழலை விரும்புபவர்கள் கண்டிப்பாக கிரீஸில் உள்ள கிரீட் தீவுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்றுவிட வேண்டும். நீலநிறக்கடற்கரை, மலைப்பகுதிகளை கொண்டு இவ்விடம் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
தாய்லாந்து செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்பதால் இந்தியர்களுக்கு ஏற்ற சிறந்த விடுமுறை சுற்றுலாத்தலமாக இவ்விடம் இருக்கிறது. தாய்லாந்தில் உள்ள பழமையான கோவில்கள் மற்றும் இரவு வாழ்க்கை, உணவுகள் மிகவும் பிரபலமாகும்.
2025 ஆம் ஆண்டின் டிரெண்டிங் இடமாக ஜப்பானில் உள்ள ஒசாகா நகரம் அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் 2025ல் ஒசாகாவில் நடந்த உலக காண்காட்சியாகும். மேலும் ஜப்பான் என்றாலே நவீனமான டெக்னாலஜியும், பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் கலாச்சாரமும் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை தருகிறது.
இயற்கை ஆர்வலர்களின் முதல் தேர்வாக பாலி இருக்கிறது. அமைதியான கடற்கரைகள், பசுமையான இயற்கை அழகு நிறைந்த இடம், தனித்துவமான கலாச்சாரம் என்று மனதை அமைதியாக்க தேவையான எல்லா அம்சங்களும் இங்கே இருப்பதால் சுற்றுலாப்பயணிகளின் ஃபேவரைட் இடமாக உள்ளது.
2025 ஆம் ஆண்டின் சிறந்த இடமாக லண்டன் உள்ளது. கலாச்சாரம், அரண்மனை, அருங்காட்சியகம் போன்ற வரலாற்று சிறப்புமிகுந்த இடத்தை காண மக்கள் எப்போதுமே ஆர்வம் காட்டுகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆப்பிரிக்க மற்றும் அரேபிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அரண்மனைகள் மற்றும் வண்ணமயமான சந்தைகள் இவ்விடத்தை மற்ற சுற்றுலாத்தலத்தை காட்டிலும் தனித்துமாக காட்டுகிறது. உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது.