மழையையும் நெடுந்தூரப் பயணத்தையும் விரும்பாதவர்கள் இருக்க முடியாது. மழைக்காலங்களில் சுற்றுலா செல்வது ஒரு சிறந்த அனுபவமாகவே இருக்கும். அந்த வகையில் மழைக்காலத்தில் அனுபவிக்க வேண்டிய 5 சிறந்த அனுபவங்களை தரக்கூடிய இடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
அழகான ,அமைதியான, இயற்கையை ரசிக்க ஏதுவான பகுதியாக இருக்கும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் குடகு மலை பயணத்தில் திபெத்தியன் மடம் ,அபெய்நீர்வீழ்ச்சி, குசால் நகர் ஆகிய இடங்கள் சொக்க வைக்கும் அழகுடன் மழைக்காலத்தில் ரசிக்க வேண்டிய இடங்களாக இருக்கின்றன சென்னையில் இருந்து பத்து மணிநேர பயணத்தில் இங்கு சென்றடையலாம்.
மலையிலிருந்து கொட்டும் அருவியை ரசிக்க சிறந்த இடமாக பெங்களூருக்கு அருகில் உள்ள அழகான நீர்வீழ்ச்சியான ஜாக் அருவி உள்ளது. சென்னையில் இருந்து பயண தொலைவு கூடுதல் தான் என்றாலும், மழைக்கால பயணத்தின் அனுபவங்கள் அற்புதமானவை சிறப்பான இந்த பயணத்திற்கு சென்னையில் இருந்து 13 மணி நேரமும் பெங்களூருவில் இருந்து ஏழு மணி நேரமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனிலவு கொண்டாட்டத்திற்கு சொர்க்கபுரியாக கருதப்படுகிறது கேரள மாநிலம் மூணாறு . அதோடு கல்லூரி தோழர்களுடன் கல்லூரி கால சுற்றுலாவிற்கு மழைக்காலத்தில் செல்ல மிகச்சிறந்த இடமாகவும் இருக்கிறது மழைக்காலங்களில் இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்களையும் மலையையும் கண்டு ரசிப்பது மிகவும் சிறப்பு மிக்கதாக உள்ளது.
கோடை வாசஸ்தலம் என்று அழைக்கப்படும் மலைகளின் அரசியான ஊட்டி மழைக்காலத்திலும் மிகச்சிறந்த இயற்கை அழகை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. மழையையும் மலையையும் ரசிக்க மிக அழகான இடங்களில் ஒன்றாக ஊட்டி இருக்கிறது.
காபி தயாரிக்க பயன்படும் ஒருவித மூலக்கூறான கஃபைனின் வாசத்தை அனுபவிக்க மழைக்காலத்தில் கர்நாடகாவின் மிக உயரமான சிகரமான சிக்மகளூருக்கு செல்ல வேண்டும். சென்னையில் இருந்து 609 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூருவில் இருந்து 5 மணி நேரத்திலும் செல்லக்கூடிய சிக்மகளூர் காபி தோட்டங்களால் நிரம்பி வழியும் மழைக்காலத்தில் செல்ல வேண்டிய சுற்றுலாத்தலமாக உள்ளது.