இன்று சர்வதேச சிற்றுலா (பிக்னிக்) நாள். டூர் என்பதற்கும் பிக்னிக் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. காலையில் ஆரம்பித்து இரவுக்குள் சிற்றுலா சென்று சில இடங்களைப் பார்ப்பது பிக்னிக் எனப்படும். வெளியூரில் இரண்டு நாட்களுக்கு மேல் ஊர் சுற்றிப் பார்ப்பதைத்தான் (டூர்) சுற்றுலா என்று சொல்கிறார்கள். ஈரோட்டில் ஒரே நாளில் சுற்றிப் பார்க்கக் கூடிய ஐந்து இடங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வ. உ. சிதம்பரனார் பூங்கா பேருந்து நிலையத்திற்கு மிக அருகில், ஈரோட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஈரோடு மாநகராட்சியால் பராமரிக்கப்படும் இந்தப் பூங்கா தோட்டங்கள், பசுமையான புல்வெளிகள் மற்றும் நல்ல நடைபாதைகளை கொண்டுள்ளது. இங்கு தினமும் ஏராளமானவர்கள் நடைப்பயிற்சி செய்கிறார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது. மாலை நேரத்தில் ஏராளமான பறவைகளைக் கண்டு ரசிக்கலாம். இந்தப் பூங்காவில் மகாவீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பழங்கால தர்கா போன்ற இடங்களும் உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய மண்ணால் அமைக்கப்பட்ட அணைகளில் ஒன்றாகும்/ இது நீர்ப்பாசனம், மின் உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக திகழ்கிறது. அணையின் நீளம் சுமார் எட்டு கிலோமீட்டர் நீளம். இது ஒரு குறிப்பிடத்தக்க பொறியியல் சாதனையாகும். இந்த அணைக்கு அருகிலேயே ஒரு அழகான பூங்கா உள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கும் பெரியவர்கள் ஓய்வெடுப்பதற்கும் ஒரு இனிமையான சூழலை வழங்குகிறது. சுற்றியுள்ள அடர்ந்த காடுகள் மற்றும் மலைகள் இந்த பிரதேசத்திற்கு அழகு சேர்க்கின்றன. இது ஈரோட்டில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இது ஈரோட்டுக்கு அருகில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு நிறைய திரைப்பட காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பவானி ஆற்றின் மீது கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கல் அணையாகும். இது ஆற்று நீர் பாய்ந்து செல்லும் ஒரு அருவியை கொண்டுள்ளது. அதனால் குளிப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இந்த அணை 24 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்களுக்கு நீர் அளிக்கிறது. இங்குள்ள பூங்கா குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் இருக்கிறது. இங்கு பவளப்பாறை சவாரிகள் உள்ளன. இது ஈரோட்டில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இயற்கையை ரசிப்பவர்கள் மற்றும் பறவைகளை ரசிப்பவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடித்த இடமாகும். ஒரு பெரிய ஏரியைச் சுற்றி பல்வேறு வகையான உள்ளூர் பறவைகளையும் புலம்பெயர்ந்த பறவைகளையும் பார்க்கலாம். இது ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இது காவிரி, பவானி மற்றும் புராண அமுத நதிகள் சங்கமிக்கும் இடமாகும். இது ஒரு புனித யாத்திரை தலமாக இருந்தாலும் இதன் ஆற்றங்கரைகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் காண்பதற்கு மிகவும் அழகானவை. இது ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.