லோ பட்ஜெட்? அப்போ இது பெஸ்ட்! தேனியில் நீங்கள் சுற்றிபார்க்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!

தேனி...
தேனி...

ம் தமிழநாட்டில் இயற்கையான  சுற்றுலா தலங்களின் எண்ணிக்கை  ஏராளம். அந்த வரிசையில் இயற்கை மற்றும் விவசாயத்திற்குப் புகழ்பெற்ற இடங்களாக இருப்பது கம்பமும் தேனியும். கோடை விடுமுறையானது நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் குறைந்த செலவில் குடும்பத்தோடு சிறப்பான சுற்றுலா அனுபவத்தைப் பெறுவதற்கான சிறந்த தேர்வாக இருக்கும் தேனி கம்பம் பகுதியின் முக்கிய ஐந்து இடங்களின் பட்டியல் இதோ!

1. சுருளி நீர் வீழ்ச்சி

சுருளி நீர் வீழ்ச்சி
சுருளி நீர் வீழ்ச்சி

சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத் திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், கம்பம் நகரிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சுமார் 40 அடி உயரம் உள்ள இந்த  அருவியில் நீர்ப் போக்குவரத்து அதிகமாய் இருப்பது வழக்கம்தான். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். அதோடு இங்குள்ள ‘சுருளியாண்டவர் கோயில்’ புகழ்பெற்றது. இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் இவ்வருவி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சுருளி நீர்வீழ்ச்சியானது  கீழ்ச் சுருளி மற்றும் மேல் சுருளி என இரண்டாக கண்டறியப்படுகிறது.

2. சேரன்ஸ் பூங்கா

சேரன்ஸ் பூங்கா
சேரன்ஸ் பூங்கா

சேரன்ஸ் பூங்கா தேனியில் சுற்றுலாவிற்காக வருபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. மேலும், இது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட சிறந்த இடமாகும் ஏனெனில் இங்கு பல  பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. இந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாடும் பகுதி, வீடியோ கேம்கள், படகு சவாரி, திறந்தவெளி திரைப்படக் காட்சிப் பகுதி மற்றும் பல பொழுதுபோக்கு சிறப்பம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இங்கு  100க்கும் அதிகமான அரிய வகை மீன்கள் வசிக்கும் ‘அக்வா கேவ்’ என்ற இடமும் உள்ளது.

3. மேகமலை

மேகமலை
மேகமலை

யற்கையான பசுமை நிறைந்த சுற்றுச்சூழல் மற்றும் குளிர்ந்த காற்று சொல்லும்  மேகமலையின் அழகை. இங்கு பெரிய மரங்கள், பசுமையான நிலப்பரப்பு, அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலைத்தோட்டங்கள், காபி பயிர்த் தோட்டங்கள், உயரமான மலைகள், ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம்தான் மேகமலை. கோடை விடுமுறைகளில் குடும்பத்தோடு சுற்றுலா செல்ல சிறந்த இடமாக நீங்கள் இதனை தேர்வு செய்துகொள்ளலாம்.

4. கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவி
கும்பக்கரை அருவி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் அமைந்துள்ள இப்பகுதி தேவதானப்பட்டி வனச் சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதோடு வட்டக்கானல், கொடைக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாகக் கொட்டுகிறதுவருடந்தோறும் மக்கள் இங்கு கூட்டம்கூட்டமாக வந்து தங்களுடைய கோடை விடுமுறையை அருவியில் நீராடியவாறு கழித்துவிட்டு செல்கின்றனர்.

5. வைகை அணை

வைகை அணை
வைகை அணை

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையானது, இயற்கையான அழகு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். வைகை ஆறானது சுமார் 111 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது மதுரையின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான மையப்பகுதியாகவும் செயல்படுகிறது. அணையைச் சுற்றியுள்ள பசுமையான சூழல், ஆற்றின் எல்லையில் உள்ள அழகிய மலைகள் மற்றும் ‘லிட்டில் பிருந்தாவன்’ என்று அழைக்கப்படும் நன்கு பராமரிக்கப்படும் தோட்டம் இவை அனைத்தும் பார்வையாளர்களை தன்வசம் கட்டி இழுக்கின்றன. அணையின் அமைதியான சூழல் மற்றும் குழந்தை களுக்கான மகிழ்ச்சிகரமான விளையாட்டுப் பொழுதுபோக்கு பகுதிகள் ஆகியவை பலருக்கும் விருப்பமான சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com