visit in mysore
Mysore tourist placesImage credit - pixabay

மைசூரில் மனம் மயக்கும் 7 இடங்கள்!

Published on

மைசூரில் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று சொன்னாலே முதலில் அங்குள்ள அரண்மனைதான் பலருக்கும் நினைவுக்கு வரும். அதை விட சுற்றிப் பார்க்க பல இடங்கள் மைசூரில் உள்ளது. அது என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1-கோபாலசாமி கோவில்: 

மலை உச்சியில் மறைந்திருக்கும் இந்த கோவில் மைசூரில் இருந்து 75கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவில் மலை பயணம் செய்பவர்களுக்கும் இயற்கை அழகிய காட்சிகளைப் புகைப்படம் எடுப்பவர்களுக்கு ஒரு சிறந்த இடமாகும்.

2-சுஞ்சனக்கட்ட அருவி: 

ராமாயனம் காலத்தில் உள்ள அருவி என மக்களால் நம்பப்படும் இந்த நீர்வீழ்ச்சி, மைசூரில் இருந்து 55கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இயற்கை அழகுடன் உள்ள இந்த இடம் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

3-ஜெயலட்சுமி விலாஸ் மேன்ஷன்:

தற்போது இந்த மேன்ஷன் மைசூர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து உள்ளது. இங்கு பழங்கால பொருட்கள் ஒன்றாக சேர்த்து மியூசியம் ஆக செயல்பட்டு வருகிறது.

4-கரைஞ்சி லேக்:

மைசூர் மிருகக் காட்சி மையத்திற்கு அருகில் உள்ள இந்த ஏரி , இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் பார்ப்பதற்கு அருமையான இடமாகும்.

5-சோமநாதபுர கோவில்: 

மைசூரில் இருந்து 35கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவில் சிற்பக்கலைக்கு பெயர் போனது ஆகும். இந்த கோவிலில் செதுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் கலை நுட்பம் வாய்ந்தது.

இதையும் படியுங்கள்:
மன உறுதியை மேம்படுத்தும் 5 குறிப்புகள்!
visit in mysore

6-மேல்கோட்: 

மைசூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செல்லுவனராயண ஸ்வாமி கோயில் மலையில் உள்ளது. இந்த கோவில் மத ரீதியாகவும் அதன் இயற்கை அழகிற்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.

7-வருணா லேக்: 

மற்ற ஏரிகளை விட இந்த ஏரி சுற்றுலா பயணிகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும். காரணம் இங்கு மக்கள் நேரத்தை செலவிட மீன் பிடித்தல், படகு சவாரி என சாகசங்கள் செய்ய ஒரு சூப்பரான இடமாகும்.

logo
Kalki Online
kalkionline.com