நாகப்பட்டினத்தில் சுற்றி பார்க்க வேண்டிய 7 முக்கிய இடங்கள்!

நாகப்பட்டினம் ...
நாகப்பட்டினம் ...

மிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்நகரம், சோழர்களின் பழமையான துறைமுக நகரமாகும். நாகப்பட்டினத்தை ‘நாவல்பட்டினம்’ என்றும் அழைப்பார்கள். ‘நாவல்’ என்றால் கப்பல் என்று பொருள். இங்கு மீன்பிடி தொழிலே பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்குகிறது. நாகப்பட்டினத்தின் அருகில் இருக்கும் விமான நிலையம், ஜப்னா விமான நிலையமாகும். நாகப்பட்டினத்தில் நுழைந்ததுமே வங்காள விரிகுடா கடற்கரை நம்மை வரவேற்கிறது. எனவே நாகப்பட்டினத்தை கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய சுற்றுலாப்பயண இடங்களின் வரிசையில் வைத்து கொள்வது சிறந்ததாகும். இன்று நாகப்பட்டினத்தில் சுற்றிப்பாக்க வேண்டிய சுற்றுலாத் தலங்களைப் பற்றி காணலாம்.

1. காயாரோகணசுவாமி கோவில் (Kayarohanaswami temple)

காயாரோகணசுவாமி கோவில்
காயாரோகணசுவாமி கோவில்

காயாரோகணசுவாமி கோவில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இக்கோவிலில் காயாரோகணா சுவாமியும், நீலயத்தாக்சியும் அருள்பாலிக்கிறார்கள். இக்கோவிலை திராவிட கட்டிடக்கலை முறைப்படி கட்டியுள்ளார்கள். இங்கே பிரதோஷ பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் 6ஆம் நூற்றாண்டிலிருந்தே இருக்கிறது. நாயன்மார்களான அப்பர், சுந்தரர், சம்மந்தர் ஆகியோரால் இக்கோவில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2. சௌந்தரராஜ பெருமாள் கோவில்

சௌந்தரராஜ பெருமாள் கோவில்
சௌந்தரராஜ பெருமாள் கோவில்

சௌந்தரராஜ பெருமாள் கோவில் 2000 வருடம் பழமையான கோவிலாகும்.  இக்கோவில் நாகப்பட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாளுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஆன்மீக தளமாகும். இக்கோவிலை சோழர்கள் கட்டியதாகவும் பின்பு தஞ்சாவூர் நாயக்கர்களால் பராமரிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பழைய தமிழ் இலக்கிய நூல்களிலும் இக்கோவில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

3. நாகூர் தர்கா

நாகூர் தர்கா
நாகூர் தர்கா

நாகப்பட்டினத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நாகூர் தர்கா. இஸ்லாமியர்களின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமாகும். இந்த தர்கா 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுப்பி முனிவரான சாகுல் ஹமீத் அவர்களின் கல்லறையின் மீதே கட்டப்பட்டிருக்கிறது. இங்கே இந்து முஸ்லிம் பாகுபாடின்றி தர்காவிற்கு  வந்து வழிப்பட்டு செல்வது வழக்கம்.

4. வைத்தீஸ்வரன் கோவில்

வைத்தீஸ்வரன் கோவில்
வைத்தீஸ்வரன் கோவில்

வைத்தீஸ்வரன் கோவில் நவக்கிரக கோவில்களுள் ஒன்றாகும். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்யோடு தொடர்புடையது. இக்கோவிலை 11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வைதீஸ்வரன் கோவில் நாடி ஜோசியத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கே சிவப்பெருமான் வைத்தீஸ்வரனாய் காட்சியளிக்கிறார். எப்பேர்ப்பட்ட நோயும் இங்கு வந்து வழிப்பட்டால் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
புருவ அமைப்பு சொல்லுமே உங்கள் குணாதிசயங்களை!
நாகப்பட்டினம் ...

5. நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்

நாகப்பட்டினத்தில் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் என்றால் மிகவும் பிரபலமாகும். இங்கே மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்களால் நம்பப்படுகிறது. நெல்லுக்கடை மாரி அல்லது சமயபுரத்தால் என்றும் அழைக்கப்படுகிறார். நெல்லுக்கடை மாரியம்மன் குழந்தை வரம், பாதுகாப்பு, செல்வத்தை அருளுவாள் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

6. பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை
பூம்புகார் கடற்கரை

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பூம்புகார் நகரத்தில் அமைந்துள்ள இயற்கையான மற்றும் பழமையான கடற்கரையே பூம்புகார் கடற்கரையாகும். பூம்புகார் கடற்கரை காவேரி ஆறிலிருந்து ஆரம்பித்து 3கிலோ மீட்டர் நெய்தவாசல் வரை நீண்டு செல்கிறது. சமீபமாக கருங்கற்களை கடற்கரையோரம் போட்டு வைத்தனர் மண் அரிப்பை தடுப்பதற்காக என்பது குறிப்பிடத்தக்கது. பூம்புகார் கடற்கரை தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த கடற்கரையாகும். சித்ரா பௌர்ணமியை முக்கியமாக இங்கே கொண்டாடப்படுகிறது.

7. வேளாங்கண்ணி மாதா கோவில்

வேளாங்கண்ணி மாதா கோவில்
வேளாங்கண்ணி மாதா கோவில்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் கிறிஸ்தவர்கள் மட்டுமில்லாமல் எல்லா மத நம்பிக்கை கொண்ட மக்களும் வந்து வழிப்படக்கூடிய இடமாகவே உள்ளது. இங்கே ஆரோக்கிய அன்னையே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த இடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாட்டிகனில் இருக்கும் போப் ஆண்டவர் வேளாங்கண்ணியை புனித நகரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாகப்பட்டினத்தில் பிரபலமான பல இடங்கள் இருக்கின்றது. அதில் முக்கியமான 7 இடங்களை பற்றி தெரிந்து கொண்டோம். நாகப்பட்டினம் சுற்றுலாத்தலமாக மட்டுமில்லாமல் எல்லா மதத்தினரும் வந்து செல்லும் ஆன்மீகத்தலமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com