70 ஹேர் பின் வளைவுகள்: கொல்லிமலையின் அற்புத அழகை பகிர்ந்த பிரபல தொழிலதிபர்!

70 ஹேர் பின் வளைவுகள்: கொல்லிமலையின் அற்புத அழகை பகிர்ந்த பிரபல தொழிலதிபர்!

சாந்தி கார்த்திகேயன்.

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்விட் செய்துள்ள ஒரு புகைப்படம், வைரலாகியுல்ளது.

அதாவது, நார்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவைத்தான் ஆனந்த் மகேந்திரா ரீடிவீட் செய்துள்ளார். நார்வே தூதர் தன்னுடைய பதிவில் 'நம்பமுடியாத இந்தியா! என்ற தலைப்பில் 70 தொடர்ச்சியான ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட கொல்லிமலையின் அபூர்வ புகைப்படத்தை பகிர்ந்துளார். அதில ''இந்தியாவின் மிகவும் அற்புதமான மலைச் சாலைகளில் ஒன்றான கொல்லிமலைச் சாலை. இது தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ஏரியல் ஷாட் புகைப்படத்தை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தன் டிவிட்டரில் ரீட்வீட் செய்துள்ளார். இது வைரலாகியுல்ளது.

அந்த பதிவில்,, 'எரிக் என் சொந்த நாட்டைப் பற்றி எனக்கே தெரியாத அற்புத விஷயங்கலை எடுத்துக் காட்டியுள்ளீர்கள். இந்த அழகிய சாலையில் விரைவில் என் காரில் தன்னந்தனியாக பயனம் செய்வேன்'' என்று கூறியுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவுவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com