மேககூட்டங்களின் நடுவே மறைந்திருக்கும் மாணிக்கம்! மேகமலைக்கு ஒரு பயணம்!

Megamalai
Megamalai

ந்தக் காலத்தில் பயணம் செய்ய விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்று இருக்கும் இயந்திர வாழ்க்கையில் இருந்து சற்றே விடுப்பட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அப்படி தாங்கள் பயணிக்கும் இடம் கூட்ட நெரிச்சலாக இல்லாமல் அமைதியாகவும் இயற்கை அழகு கொஞ்சும் சூழலுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயமாக தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலைக்கு தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது சென்று பார்த்து விட வேண்டும்.

கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக் கிறது. மேகமலை (அதன் பெயருக்கு ஏற்றாற்போல்) மேகங்ளுக்கு நடுவிலே அழகாக காட்சியளிக்க கூடிய இடமாகும். இந்த இடத்தை சுற்றி நிறைய டீ மற்றும் ஏலக்காய் எஸ்டேட்டுகளும் அணைகளும் உள்ளன.

மணலாறு அணை சுற்றி பார்ப்பதற்கு சிறந்த இடம். கண்களுக்கு விருந்தளிக்க கூடியதாகவும் இருக்கும்.

ஹைவேவ் அணை மேகமலையில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. அணையின் கட்டமைப்பைப் பற்றி நேரில் பார்த்து தெரிந்துகொள்ள சிறந்த இடம்.

மேகமலையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களெல்லாம் கிடையாது என்பது ஒரு பெரிய குறையாக தெரியாத வண்ணம் தெருவோர கடை உணவுகள் மிகவும் சிறப்பாக இயங்குகின்றன. அங்கே வாழும் மக்கள் உணவுகளை அன்பும் அரவணைப்புடனும் வழங்குகிறார்கள், மிகவும் குறைந்த விலையில்.

தங்கும் வசதிக்கு முன்பதிவு செய்துகொள்வது அவசியம்.

manalaaru dam
manalaaru dam

சாதகம்:

மேகக்கூட்டங்களின் அழகை ரசிக்கலாம்.

காராஜா மேடுவில் இருந்து மேகமலையின் அழகை ரசிக்கலாம்.

கூட்டம் இல்லாத தனிமையில் இயற்கை அழகை ரசிக்கலாம்.

ங்காங்கேயிருக்கும் அருவிகளின் அழகு ரம்மியமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஷீரடி சாயிபாபா அமர்ந்து அருளாசி வழங்கிய ஷீலா கல்!
Megamalai

பாதகம்:

கைப்பேசியை பயன்படுத்துவதில் சிரமம் இருக்கும்.

ங்குவதற்கு வசதியான இடங்கள் இல்லாதது.

பேருந்து வசதிகள் குறைவாக இருப்பது.

சுற்றிப்பார்க்க குறைவான இடங்களே உள்ளது.

மேகமலையை சுற்றி பார்க்க ஒரு நாள் போதுமானது.

பைக் ரைட் போக விருப்பம் உள்ளவர்களுக்கு சிறந்த இடமாக இருக்கும். ஏனெனில் இதன் மலைப்பாதை 18 கொண்டை ஊசி வளைவுகளைக்கொண்டது.

ஆகமொத்தத்தில் மேகமலை இயற்கை விரும்பிகளுக்கும் தனிமை விரும்பிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com