ராஜஸ்தானில் உள்ள Bikaner-க்கு ஒரு வரலாற்றுப் பயணம்!

Bikaner
BikanerImge credit: Lonely planet

ராஜஸ்தானில் உள்ள இந்த பிகானேர் என்ற இடம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாகும். இது கலாச்சாரத்திற்கும் தனித்துவமான கட்டட கலைகளுக்கும் பெயர்போனது. பிகானேர் நிச்சயம் உங்களுக்கு ஒரு துடிப்பான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அந்தவகையில் பிகானேரில் எந்தெந்த இடங்களுக்கு செல்லலாம் மற்றும் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

1. ஜூனகர் கோட்டை:

ஜூனகர் கோட்டை
ஜூனகர் கோட்டைImge credit: Veena world

இந்த கோட்டையில் நீங்கள் பல்வேறு கட்டடக்கலைகளின் கலவைகளைப் பார்க்கலாம். அதேபோல் மன்னர் காலங்களில் கலைகள், அரண்மனை முற்றங்கள் போன்றவை எப்படி இருக்கும் என்பதை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தால் கட்டாயம் இங்கு செல்லலாம்.

2. கர்னி மாதா கோவில்:

கர்னி மாதா கோவில்
கர்னி மாதா கோவில்

இது முதலில் உள்ளூர் மக்களால் போற்றப்பட்டு பிற்பாடு இதன் தனித்துவத்தால் அனைவரையும் ஈர்த்த கோவில். இந்த கோவில் எலிகளுக்கு அற்பணிக்கப்பட்டது. இங்கு எலிகளை புனிதத்துவம் வாய்ந்ததாகக் கருதுவார்கள்.

3. லால்கர் அரண்மனை:   

லால்கர் அரண்மனை
லால்கர் அரண்மனை

இந்த லால்கர் அரண்மனை ராஜ்புத், முகலாய மற்றும் ஐரோப்பிய கலவையின் கட்டடக்கலையில் கட்டப்பட்டது. இது இப்போது பாரம்பரிய ஹோட்டலாகவும், அருங்காட்சியமாகவும் செயல்படுகிறது.

4. ஒட்டக சஃபாரி:

ஒட்டக சஃபாரி
ஒட்டக சஃபாரி

பிகானேர் ஒட்டக சஃபாரிக்கு மிகவும் பெயர் போனது. சஃபாரியின் மூலம் தார் பாலைவனத்தை பார்த்து ரசிக்கலாம். அங்கு வாழ்பவர்களின் கலாச்சாரத்தையும் தெரிந்துக்கொள்ளலாம்.

5. ஒட்டகத்தின் தேசிய ஆராய்ச்சி மையம்:

ஒட்டகத்தின் தேசிய ஆராய்ச்சி மையம்
ஒட்டகத்தின் தேசிய ஆராய்ச்சி மையம்

ஒட்டகங்கள் மற்றும் பாலைவனங்கள் பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள இந்த இடத்திற்கு செல்லலாம். இங்கு ஒட்டகங்களின் வளர்ப்பு, அதன் உணவு முறை , பராமரிப்பு என அனைத்தையும் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

6. பண்டாசர் ஜெயின் கோவில்:

பண்டாசர் ஜெயின் கோவில்
பண்டாசர் ஜெயின் கோவில்

அழகிய ஓவியங்களுக்கும் நுட்பமான வேலைப்பாடுகளுக்கும் பெயர் பெற்ற இந்த கோவில் பிகானேரின் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவில் 23வது ஜெயின் தீர்த்தங்கரரான பார்ஷ்வநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்.

7. ராம்பூரியா ஹவேலிஸ்:

ராம்பூரியா ஹவேலிஸ்
ராம்பூரியா ஹவேலிஸ்

ஹவேலிகள் என்றால் மாளிகைகள் நிரம்பிய சாலை என்று அர்த்தம். இந்த ராம்பூரியா ஹவேலிஸ், மார்வாரி வணிகர்களின் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகள் நிரம்பிய சாலை ஆகும். இங்கு ஒரு நடைப் பயணம் செய்தால் மாளிகைகளின் சிற்பங்கள் மற்றும் கட்டடக்கலைகளை ஆராயலாம்.

8. கஜ்னர் அரண்மனை:

கஜ்னர் அரண்மனை
கஜ்னர் அரண்மனை

கஜ்னர் ஏரியின் கரையில் உள்ள இந்த அரண்மனை அமைதியான சூழலைத் தரக்கூடியது. இப்போது ஹோட்டலாக மாறிய இந்த அரண்மனையில் நாள் முழுவதும் தங்கினால் கூட நேரம் செல்வதே தெரியாது.

9. பாலைவனத் திருவிழா:

பாலைவனத் திருவிழா
பாலைவனத் திருவிழா

ஆண்டுதோறும் பாலைவன திருவிழா என்பது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் ஒன்றாகும். இந்த திருவிழாவில் பல பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நிகழ்ச்சிகள், ஒட்டகப் பந்தயம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது நீங்கள் சென்றால் நிச்சயம் இது ஒரு விருந்தாகத்தான் இருக்கும்.

10. உள்ளூர் உணவுகள்:

உள்ளூர் உணவுகள்
உள்ளூர் உணவுகள்

பிகானேர் அதன் பாரம்பரிய ராஜஸ்தானி தாலிகளுடன், புஜியா மற்றும் ரஸ்குல்லா ஆகியவை அங்கு மிகவும் பிரபலமானது. ஒருவேளை நீங்கள் அங்கு சென்றால் உள்ளூர் ராஜஸ்தான் உணவுகளை மறக்காமல் சுவைத்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com