நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் தமிழர்களின் அதிசய சிற்பக்கலை ரகசியங்கள்!

நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் தமிழர்களின் அதிசய சிற்பக்கலை ரகசியங்கள்!

‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்' என்று தமிழர்களின் சிற்பக்கலையை பற்றி புகழ்ந்து தள்ளும் அளவிற்கு தமிழர்கள் கோவில்களில் வடித்து வைத்திருக்கும் எண்ணற்ற சிற்பங்களின் கலை நுணுக்கம் ஆச்சர்யத்தை அளிக்கிறது. அப்படி தமிழர்கள் கைவண்ணத்தில் உருவான சில அதிசய சிற்பங்களைப் பற்றி இன்று பார்க்கலாம்.

யாளி என்னும் மிருகத்தை பற்றி நாம் கேள்விப் பட்டிருப்போம். முக்கியமாக தென்இந்திய கோவில்களில் இந்த மிருகத்தின் சிலையை பார்த்திருப்போம். ஆனால் உண்மையாகவே இப்படியொரு மிருகம் இருந்திருக்குமா? நம் முன்னோர்களை அதை பார்த்திருப்பார்களா? இல்லை இது வெறும் கற்பனையாக வந்த மிருகமா? யானையையே தூக்கி சாப்பிடக்கூடியது யாளி என்று கூறுவார்கள். அதன் மீதும் ஒரு மனிதர் அமர்ந்து சவாரி செய்வது போன்று இருக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்வது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 2300 வருட பழமையான திருக்குருங்குடி கோவிலில் இருக்கும் ஒரு யாளி சிலையின் வாயிலே கல்லால் ஆன பந்து இருக்கிறது. அதை உருட்டி விளையாட முடியும். ஆனால் யாளி சிலையின் வாயிலிருந்து வெளியே எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. யாளியும் அதன் வாய்க்குள் இருக்கும் உருண்டையும் ஒரே கல்லிலே செதுக்கப் பட்டுள்ளது. யாளியின் வாயினுள் இருக்கும் சுழலக்கூடிய பந்தை எப்படி செதுக்கியிருப்பார்கள் என்று நினைக்கும் போது அதிசயமாக உள்ளது.

வாய்க்குள் இருக்கும் உருண்டை...
வாய்க்குள் இருக்கும் உருண்டை...

விஷ்ணு புராணத்தின்படி தீயசக்திகள் இந்த உலகத்தை நீரினால் மூழ்கடித்து அழிக்க நினைத்தபோது, பூமியையும், பூமாதேவியையும் காப்பாற்ற விஷ்ணு எடுத்த அவதாரமே வராக அவதாரம்.

இதையும் படியுங்கள்:
‘செவன் சிஸ்டர்ஸ்’ அருவிக்கு ஒரு விசிட் அடிக்கலாம் வாங்க!
நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் தமிழர்களின் அதிசய சிற்பக்கலை ரகசியங்கள்!

கர்நாடகாவில் உள்ள சூர்யதுர்கா கோவிலில் 8ஆம் நூற்றாண்டில் சாலுக்கிய மன்னர்களால் தமிழக சிற்பிகளை வைத்து கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலில் வராக சிற்பத்தை தமிழர்களை வடித்திருக்கிறார்கள். அந்த சிற்பத்தை நன்றாக உற்றுப்பார்த்தால் ஒன்று புலப்படும். அதாவது வராக அவதாரத்தின் மீது பூமி உருண்டை வடிவில் செதுக்கப்பட்டிருக்கும்.

வராக அவதாரம்
வராக அவதாரம்

நம்முடைய முன்னோர்களுக்கு பூமி என்பது உருண்டை வடிவில் தான் இருக்கின்றது என்பது எப்படி தெரியும்? இன்று அறிவியலில் வளர்ச்சி அடைந்த காலத்திலேயே பூமி உருண்டையா இல்லை தட்டையா என்ற விவாதங்கள் போய் கொண்டிருக்கிறது. ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன் இது அவர்களுக்கு எப்படி தெரிந்திருக்கும் என்பது வியப்பளிக்கிறது.

கைகளில் நரம்புகள்...
கைகளில் நரம்புகள்...

அதுமட்டுமில்லாமல் புதுகோட்டை ஆவுடையாரப்பன் கோவிலில் உள்ள ஒரு சிற்பத்தின் மணிக்கட்டுகள் வரை அழகாக செதுக்கியிருப்பது அதிசயமாக உள்ளது. இதுவே அதிசயமென்றால் இன்னும் ஒரு பழைய சிற்பத்தில் எலும்பையும் தாண்டி கைகளில் நரம்புகள் தெரிவதை கூட அழகாக சிற்பமாக வடித்திருக்கிறார்கள் என்றால் தமிழர்களின் கலைத்திறனை என்னவென்று சொல்வது.

இன்னும் இப்படி எண்ணற்ற சிற்பக்கலைகளின் அதிசயங்கள் தமிழக கோவில்கள் முழுவதுமே கொட்டிக் கிடக்கின்றது. அவற்றையெல்லாம் பார்த்து ரசிக்க நமக்கு இரண்டு கண்கள் போதாது என்றே சொல்ல வேண்டும். இத்தகைய அதிசயம் மிகுந்த கோவில்களின் அழகை கண்டிப்பாக வாழ்வில் ஒருமுறையாவது ரசித்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தத்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com