புளோரிடா (அமெரிக்கா) பயணக்கதை - 2 : அட்டைப் பெட்டியில் போட்டுக் கிடக்கும் மாம்பழங்கள்!

மியாமி பீச், கீ வெஸ்ட் தீவு மற்றும் உல்லாசக் கப்பல் அனுபவங்களின் முழுமையான புளோரிடா பயணத் தொகுப்பு!
புளோரிடா பயணம்-Florida Travel
புளோரிடா பயணம்-Florida Travel
Updated on

நமது மெரினாவில் பல வசதிகள் செய்யப்படவில்லை என்பதே நிதர்சனம். நீரை ஒரு நல்ல மூலதனமாகவே நாம் நினைப்பதில்லை. நீர்நிலைகள், கடல்களை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை. சுதந்திரம் பெற்று சுமார் 80 ஆண்டுகளை நெருங்கி விட்ட நிலையிலும், நமது இயற்கை வளங்களை உரிய முறையில் உபயோகிப்பதில் நாம் இன்னும் பின்தங்கியே உள்ளோம். ஆனால் எவையெல்லாம் மக்கள் நல்வாழ்வுக்குத் தேவையோ, அவற்றைச் சுரண்டியாவது விற்று ஜனங்களைத் தவிக்க விடுகிறோம்!

க்ரூஸ் (Cruise) என்றழைக்கப்படும் உல்லாசக் கப்பல் பயணத்தை இங்கு பெரும்பாலானவர்கள் அனுபவிக்கிறார்கள். 3 நாட்களிலிருத்து 365 நாட்கள் பயணங்கள் உண்டாம்.15-20 டெக்குகள் (மாடிகள்) கொண்ட பல ராட்சத கப்பல்கள் உண்டு. ஐகான் ஆப் த சீஸ் (Icon of the Seas) என்றழைக்கப்படும் கப்பலில் சுமார் 10,000 பேர் பயணிக்கலாமாம்.

சம்மரில் குழந்தைகளுடன் பயணம் செல்கையில் அவர்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்றால் அவர்களுக்கும் உற்சாகம், அதன் மூலம் பெரியவர்களின் உற்சாகமும் பன்மடங்காகும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com