அட்டப்பாடி போறீங்களா? அட்டகாசமான இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

அட்டப்பாடி ...
அட்டப்பாடி ...

விடுமுறைக் கொண்டாட்டங்களில் முக்கியமானது சுற்றுலா. சுற்றுலாவிற்கு தேர்ந்தெடுக்கும் இடங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தருவதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சுற்றுலாத்தலம்தான் இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அழகிய மலைப்பள்ளத்தாக்கான அட்டப்பாடி.  மலையாளத்தில் நெல்வயல் எனப்படும் இது சுமார்  865 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. அட்டப்பாடி தாலுகாவில் குறும்பர், முதுவர், இருளர் போன்ற மலைவாழ் பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர்.

எப்படி செல்வது?அட்டப்பாடியில் இருந்து சுமார் 20 நிமிட தூரத்தில் வெள்ளரப்பிள்ளியின் அருகில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கும் ரயில் சேவை மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வரலாம். அட்டப்பாடியிலிருந்து  200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமானம் நிலையம் மற்றும் சென்னை ஹைதராபாத் புதுச்சேரி போன்ற நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து மூலமாகவும் இங்கு எளிதாக வந்து செல்லும் வசதிகளுண்டு.

1. ஆக்ஸி வேலி கார்டன்ஸ் (Oxy Valley Gardens)

Oxy Valley Gardens
Oxy Valley Gardens

நகரத்தின் பரபரப்பில் இருந்து விடுபட விரும்புவர்களுக்கு இந்த  கார்டன் சரியான தேர்வாகும். அழகிய தோட்டங்கள் நிறைந்த பசுமையான சூழல் ஓய்வெடுக்கவும் புத்துணர்வு பெறவும் உகந்த இடம். ஹைக்கிங் மற்றும் பைக்கிங், பறவைகள் கண்காணிப்பு போன்றவைகள் உற்சாகப் படுத்தும் விஷயங்கள். வளைந்து செல்லும் மலைச் சாலைகளை பேருந்தில் செல்லும்போது ரசிப்பது சுகமானது.

2. அமைதி பள்ளத்தாக்கு (Silent Valley)

Silent Valley
Silent Valley

ட்டப்பாடியின் பிரபலமான சுற்றுலா தலமான அமைதி பள்ளத்தாக்கு. நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பொது போக்குவரத்து மூலம் எளிதாக இங்கு சென்றிடலாம் .பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் அரிய தாவரங்கள் கொண்ட மலைப் பிரதேசம் காணலாம், இங்குள்ள பூங்கா அனைவரையும் கவரும். மேலும் உலாவும் சஃபாரிகள் பள்ளத்தாக்கில் விசேஷமானவை.

3. கன்னிப் பள்ளத்தாக்கு (Virjin Valley)

Virjin Valley
Virjin Valley

கரத்திலிருந்து சுமார் 45 நிமிடங்களில் கார் அல்லது பேருந்து மூலம் எளிதாக செல்ல முடிகிற கன்னிப் பள்ளத்தாக்கு அல்லது விர்ஜின் பள்ளத்தாக்கு. அழகான இயற்கை காட்சி மற்றும் மலையேற்றத்திற்கு பெயர் பெற்றது. பிரபலமான உணவகங்கள் மற்றும் கஃபேக்கள், கயாக்கிங், கேனோயின், ஹைகிங் மற்றும் கேம்பிங் உட்பட பயணிகளைக் கவரும் பல்வேறு அம்சங்கள் இங்கு உள்ளன. இரவில் தங்கும் வசதி கொண்ட பல சொகுசு ஹோட்டல்கள் இங்கு உள்ளன.

4. அட்டப்பாடி ரிசர்வ் காடு (Attapadi Reserve Forest)

Attapadi Reserve Forest
Attapadi Reserve Forest

கர மையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அட்டப்பாடி ரிசர்வ் ஃபாரஸ்ட் அமைதியான அனுபவத்துக்கு ஏற்ற இடமாகும். இங்கு பசுமையான சூழல் கொண்ட காடுகளின் இடையில் நடந்து செல்வது அற்புதமான சுகம் தரும். ஜீப்பிலும் இங்கு வலம் வரலாம். இப்பகுதியில் பல ஏரிகள் மற்றும் ஆறுகள் உள்ளதால் நீந்துவது, மீன் பிடிப்பது, படகு சவாரி போன்றவைகள் சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்தும்.

5. வெள்ளியங்கிரி மலைகள் (Velliangiri Hills)

Velliangiri Hills
Velliangiri Hills

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது அழகிய வெள்ளியங்கிரி மலைகள். பேருந்து அல்லது கார்கள் மூலம் இங்கு செல்லும்போது மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் உள்ள மலையேற்றப் பாதைகள் மற்றும் இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்.  இந்த மலைகள் அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உறைவிடமாக உள்ளது சிறப்பு.

6. அவலாஞ்சி ஏரி (Avalanche Lake)

Avalanche Lake
Avalanche Lake

நீலகிரி மலைப்பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமான அவலாஞ்சி ஏரியை சுற்றி எப்போதும் மாக்னோலியா, ஆர்கேட் போன்ற அழகிய மலர்கள் கண்கொள்ளா கட்சியாக  பூத்துக் குலுங்கும் காட்சிகளை ரசிக்கலாம். ஏரியை சுற்றி நடந்து செல்லக்கூடிய நடை அழகான நடைபாதைகள் உள்ளன. டிரவுட் மீன்களுக்கு இந்த ஏரி ஒரு சிறந்த இடம் ஆகிறது. ஏரிக்கரையில் உள்ள ட்ரவுட் குஞ்சு மீன் பொரிப்பகத்தில் பார்வையாளர்கள் மீன் வளர்ப்புக்கான உபகரணங்களை வாங்கலாம்.

7. அட்டப்பாடி வனப்பகுதி (Attapadi Forest Area)

Attapadi Forest Area
Attapadi Forest Area

கர மையத்திலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர்  தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அட்டப்பாடி வனப்பகுதி கேரளாவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இந்த வனத்தில் யானைகள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் போன்ற வனவிலங்குகளுடன் பல்வேறு பறவைகள் மற்றும் ஊர்வனவற்றையும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

8. மீன்வல்லம் நீர்வீழ்ச்சி  (Meenvallam Waterfalls)

Meenvallam Waterfalls
Meenvallam Waterfalls

பிரபலமான நீர் வல்லம் நீர்வீழ்ச்சி அட்டப்பாடியின் நகர மையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஏறத்தாழ 30 மீட்டர் உயரமுள்ள அருவியின் உச்சியில் இருந்து சுற்றி உள்ள அழகிய காட்சிகளை ரசிப்பது பூமியின் சொர்க்கம்.

9. சிறுவாணி நீர்த்தேக்கம் (Siruvani reservoir)

Siruvani reservoir
Siruvani reservoir

கரத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுவாணி மேற்கு நீர் தேக்கத்திற்கு பேருந்து அல்லது வாடகை கார் மூலம் செல்லலாம். இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள இயற்கையின் அழகை ரசிக்கவும், உடற்பயிற்சி செய்யவும் சிறந்த இடமாக திகழ்கிறது. நீர் தேக்கத்தின் நடைபாதைகள் மற்றும் நீச்சல் பகுதிகள் பயணிகளைக் கவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com