
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் அதிக மழைப்பொழிவு இருக்கும். அதோடு பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையும் சேர்ந்து வரும். ஆகவே டிசம்பர் மாதம் தென்னிந்தியாவில் கண்டு ரசிக்கத்தக்க 5கடற்கரை நகரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கர்நாடக மாநிலத்தின் மங்களூர் நகருக்கு அருகில் உள்ள வித்தியாசமான கடற்கரை நகரமான முல்கியில், சர்ஃபிங் மற்றும் கயாக்கிங் போன்ற நீர் விளையாட்டுகள் மிகவும் பிரபலம் என்பதால், சாகசங்களை விரும்புபவர்கள் கண்டிப்பாக டிசம்பரில் இங்கு வரலாம். வானிலையும் டிசம்பர் மாதம் இங்கு சீராக இருக்கும் என்பதால் கடற்கரையில் அமர்ந்து நிம்மதியாகவும், அமைதியாகவும் நேரத்தை செலவழிப்பதோடு, கடல் சார்ந்த உணவுகளையும் உண்டு ரசிக்கலாம்.
கேரளாவில் உள்ள கடற்கரை கிராமமான பூவார், அமைதி விரும்பிகளுக்கு சொர்க்க பூமியாக இருக்கிறது. டிசம்பர் மாதம் வானிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதால் புதுமணத் தம்பதிகள், இயற்கை ஆர்வலர்கள் படகு சவாரி செய்து நெய்யார் நதி அரபிக்கடலை சந்திக்கும் இடத்தில் உள்ள அழகிய காட்சிகளை கண்டு ரசிக்கலாம் பூவார் புத்துணர்ச்சியூட்டும் இடமாக டிசம்பரில் இருக்கும்.
கர்நாடகாவின் அழகிய கடற்கரை நகரங்களில் ஒன்றான முர்தேஷ்வரில் பிரம்மாண்ட சிவன் சிலை மிகவும் பிரபலமானதாக இருப்பதோடு, கடற்கரையை சுற்றியிருக்கும் இக்கோவில் மன நிம்மதியை கொடுக்கிறது. இதற்கு அருகில் உள்ள நேத்ரானி தீவில் கடல் நீருக்கடியில் சாகசங்களை செய்யும் வசதிகளும் அங்குள்ளது.
அழகிய நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற பொன்னானி கேரளாவின் கடற்கரை நகரமாக இருப்பதோடு, ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்கும் வித்தியாசமான இடமாகும். மிகப் பழமையான மசூதிகள், கோவில்கள் நிறைந்து காணப்படுவதோடு பாரதப்புழா நதி அரபிக்கடலில் சங்கமிக்கும் இடத்தையும் டிசம்பர் மாத வானிலையில் சிறப்பாக கண்டு ரசிக்கலாம்.
டிசம்பரில் ரம்மியமான அனுபவத்தை கர்நாடகாவில் உள்ள கும்தா கடற்கரை கொடுக்கிறது. அழகிய சூரிய அஸ்தமனத்தை இங்கு கண்டுகளிக்கலாம். மேலும் இக்கடற்கரைக்கு குறைந்த அளவே சுற்றுலாப்பயணிகள் வருகை புரிவர் என்பதால் தொந்தரவு ஏதுமின்றி டிசம்பரில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை கண்டு ரசிக்கலாம். அரையாண்டு விடுமுறை விடும் டிசம்பர் மாதத்தில் மேற்கூறிய இடங்களை கண்டு ரசியுங்கள் .