இந்தியாவின் அழகான ரயில் நிலையங்கள்!

beauty railway stations
Indian railways...

யில் பயணங்களையும் ரயில் சினேகங்களையும் மறக்கவே முடியாது அதேபோல் மறக்கவே முடியாத இந்தியாவில் அழகான ரயில் நிலையங்களில் தொகுப்பை தான் தற்போது காணப் போகிறோம்.

1. கார்வார் ரயில் நிலையம், கர்நாடகா

beauty railway stations
கார்வார் ரயில் நிலையம்

யற்கை அழகுக்கு பெயர் பெற்ற கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் நகரில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் தலைநகரங்களான பெங்களூரு மற்றும் மும்பையை இணைக்கும் முக்கிய ரயில் பாதையில் வருகிறது.

1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட கார்வார்  "கர்நாடகாவின் காஷ்மீர்" என்று அழைக்கப்பட்டு, டெல்லி, ஜெய்ப்பூர், இந்தூர், எர்ணாகுளம், கோயம்புத்தூர் போன்ற பிற நகரங்களையும் இணைக்கும் ஒரே நிலையமாக உள்ளது. இந்த நிலையத்தையும் சுற்றுப்புறப் பகுதிகளையும் மழைக்காலத்தில் பார்த்தால் மயங்கிப் போய்விடுவது உறுதி.

2. ஹஃப்லாங் ரயில் நிலையம், அசாம்

beauty railway stations
ஹஃப்லாங் ரயில் நிலையம்

ந்திய ரயில்வேயால் "பசுமை ரயில் நிலையம்" என்று அங்கீகரிக்கப்பட்ட ஹஃப்லாங் ரயில் நிலையம் அசாமில் உள்ள திமா ஹசாவோ மாவட்டத்தில், ஹஃப்லாங்கை குவஹாத்தி மற்றும் சில்சாருடன் இணைக்கிறது. அசாமில் உள்ள பசுமையான மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த அழகிய நிலையம் உண்மையிலேயே கண்கொள்ளா காட்சியாகும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன் படுத்துதல், எரிபொருள் திறனை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகளை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் நட்பு நடவடிக்கைகளுக்காக ஹஃப்லாங் நிலையம் சிறப்பு  பெற்றுள்ளது.

3. தூத் சாகர் ரயில் நிலையம், கோவா

beauty railway stations
தூத் சாகர் ரயில் நிலையம்

கோவாவில் உள்ள பிரபலமான கடற்கரைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரசித்தி பெற்றது போல் இங்குள்ள தூத் சாகர் ரயில் நிலையம் இயற்கை எழில் கொழிக்கும் ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. 

கோவா மற்றும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள இந்த நிலையம் பயணிகளுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் படப்பிடிப்பும் தூத் சாகர் அருவிக்கு அருகில் நடந்தது,

4. கத்கோடம் ரயில் நிலையம், உத்தரகாண்ட்

beauty railway stations
கத்கோடம் ரயில் நிலையம்

ழகிய மலைகளால் சூழப்பட்ட உத்தரகாண்டில் உள்ள கத்கோடம் ரயில் நிலையம் டெஹ்ரடூன் மற்றும் கத்கோடமை இணைக்கும்  பசுமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இயற்கை ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இது சூரிய மின்சக்தி, மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

புது தில்லி-கத்கோடம் சதாப்தி எக்ஸ்பிரஸ், லக்னோ சந்திப்பு-கத்கோடம் எக்ஸ்பிரஸ், ராணிக்கேட் எக்ஸ்பிரஸ், உத்தரகாண்ட் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்த நிலையம் வழியாகச் செல்லும் சில பிரபலமான ரயில்கள்.

5. சிம்லா ரயில் நிலையம், ஹிமாச்சல பிரதேசம்

beauty railway stations
சிம்லா ரயில் நிலையம்

ந்தியாவின் மிக அழகான இயற்கை அழகுக்கு பெயர்பெற்ற மலைவாசஸ்தலங்களில் ஒன்றான சிம்லாவின் அழகில்  ரயில் நிலையம் சிறப்பம்சமாக உள்ளது. சிம்லாவுக்குச் செல்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இந்த நிலையம் அழகிய மலைகள் மற்றும் பசுமையான காடுகளால் சூழப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தைச் சுற்றி பசுமையைப் பாதுகாக்க மரங்களை நடுதல், சூரிய மின் தகடுகளை நிறுவுதல், மறுசுழற்சி செய்தல், கழிவு மேலாண்மையை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே எடுத்துள்ளது. இந்த நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பும் உள்ளது, இது நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்ய பயன்படுகிறது. சிம்லா ரயில் நிலையம்.

ரயில் பயணங்களைத் தாண்டி சுற்றுலா தலமாக இருக்கும் இந்த ஐந்து ரயில் நிலையங்களை ஒரு முறை சென்று பார்த்து வருவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com