தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்கள்!

ஆரோவில்
ஆரோவில்

ங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தால் தமிழ்நாட்டில் இனி இந்த இடத்திற்கெல்லாம் சென்று வரலாம்.

ஆரோவில்:

“The city of Dawn” என்றழைக்கப்படும் ஆரோவில் நகரம் பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு இந்தியா முழுவதும் 23 மாநிலங்களிலிருந்து அதிகம் மக்கள் இந்த இடத்தைப் பார்க்க வருகிறார்கள். இது ஒரு பக்தி மயமான இடம் என்பதால் மனதுக்கு அமைதியான ஒரு உணர்வைத் தரும். ஆரோவில் நகரம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மிகுந்த ஒரு இடம். இந்த இடத்தை சுற்றுலாத்தளமாக அமைத்ததின் நோக்கம் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். குடும்பத்துடன் இரண்டு நாள் சுற்றுலா செல்வதற்கு இது சரியான இடமாக இருக்கும். நவம்பர் மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் இந்த இடத்திற்கு செல்லலாம்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி
பொள்ளாச்சி

பொள்ளாச்சி கோவையின் தெற்கு பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் அடிக்கடி படப்பிடிப்புகள் நடக்கும். இந்த இடத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் கட்டாயம் பார்க்க வேண்டியது. மேலும், மாசானி அம்மன் கோவில், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் வளைவு, பொள்ளாச்சி ஐயப்பன் கோவில், பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கு இரண்டு நாள் பயணமாக இங்கு டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் செல்லலாம்.

யானம்:

யானம்
யானம்

து புதுச்சேரியில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம். யானம் அதிக கோவில்கள் நிறைந்த இடம். மேலும் இங்கு பழமையான கலைநயமிக்க சர்ச்சுகளும் அதிகம் உள்ளன. அதேபோல் இந்த யானம் பகுதி, புது திருமண ஜோடிகள் செல்லவும் ஏற்ற இடம். இந்த இடத்திற்கு ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் செல்லலாம். இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம் என்பதால், இரண்டு நாள் முதல் நான்கு நாள் வரை சுற்றிப் பார்க்கலாம். யானம் டவர், ஜீசஸ் சர்ச், யானம் பொட்டானிக்கல் பூங்கா ஆகியவற்றை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

தரங்கம்பாடி (Tranquebar)

தரங்கம்பாடி
தரங்கம்பாடி

ந்த கடற்கரை,14 நூற்றாண்டில் சிவன் கோவில் கட்டிய பிறகுதான் பிரசித்து பெற்றது. இங்கு வரலாற்று செய்திகள், கட்டிட கலைகள் ஆகியவற்றை அதிகம் பார்க்கலாம். இந்த கடற்கரைக்கு நவம்பர் முதல் மார்ச் மாதங்களில் செல்லலாம். டான்ஸ்பார்க், ஜெருஸேலம் சர்ச், தரங்கம்பாடி அருங்காட்சியாகம், தனீஷ் கோட்டை, மாசிலாமனி ஈஷ்வரன் கோவில் ஆகியவை இரண்டு நாட்களில் பார்க்க வேண்டிய இடங்கள்.

இதையும் படியுங்கள்:
மருத்துவ குணமிக்க கருப்பு நிற மஞ்சளின் மகிமை தெரியுமா?
ஆரோவில்

செட்டிநாடு:

செட்டிநாடு
செட்டிநாடு

துரையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் செட்டிநாடு ஒரு பாரம்பரியம் மிக்க இடம். செட்டிநாடு என்றாலே முதலில் உணவுத்தான் நியாபகம் வரும். இங்கு நல்ல உணவுக்கும் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களுக்கும் மட்டும் பஞ்சமே இல்லை. இங்கு அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் செல்லலாம். செட்டிநாடு அரண்மனை, அருங்காட்சியகம், சூரக்குடி, பிள்ளையார்பட்டி, ஆத்மநாதஸ்வாமி கோவில் ஆகிய இடங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com