பரளிக்காடு சுற்றுலா போகலாமா? வாருங்கள்!

பரளிக்காடு சுற்றுலா
பரளிக்காடு சுற்றுலா

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பில்லூர் அணைக்கு அருகில் உள்ளது பரளிக்காடு. 

கோவை காந்திபுரத்திலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் அழகான இயற்கை எழில் கொஞ்சும் பரளிக்காட்டை அடையலாம். இங்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பரளிக்காடு சுற்றுலாத்தலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரளிக்காடு செல்வதற்கு வனத்துறையிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்த பூச்சிமரத்தூரை அடுத்துள்ளது பரளிக்காடு. முள்ளி என்ற இடத்தில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியை கடந்த பின்னரே பரளிக்காட்டை அடைய முடியும்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அடர்த்தியான காடு, பில்லூர் ஆறு, மலை வாழ் மக்களின் உணவு, பரிசல் பயணம் என மனதுக்கும் உட லுக்கும் புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய இடம் இந்த சுற்றுலாத் தலம்.

இப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் நாம் நினைத்தவுடன் இந்த இடத்திற்கு செல்ல முடியாது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

பரளிக்காடு சுற்றுலா மையத்துக்கு அருகிலேயே பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா மையமும் உள்ளது. இங்கு தங்கும் இடங்களை வனத்துறையினரே ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்கள்.

இந்த இடத்திற்கு செல்ல போதுமான பேருந்து வசதிகள் கிடையாது. சொந்த வாகனங்களிலோ, வாடகை வாகனங்களிலோ தான் செல்ல வேண்டும்.

பழங்குடியினர்...
பழங்குடியினர்...

பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் படகு சவாரி செய்து எழில் கொஞ்சும் இயற்கையை கண்டு ரசிக்கலாம்.பில்லூர் ஆற்றில் குளிக்க அனுமதி உண்டு. 

அதே போல் பரிசல் பயணமும் அந்த அடர்த்தியான வனப்பகுதியின் அருமையான சீதோஷன நிலையும் நம்மை வெகுவாக கவரும்.

இங்குள்ள மலைவாழ் மக்கள் (பழங்குடியினர்) வருகின்ற மக்களுக்கு பாரம்பரியமான உணவு வகைகளை 3 வேளையும் சமைத்து கொடுத்தும், படகு ஓட்டியும் தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொள்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com