இரண்டு மணி நேரத்தில் சென்னை டூ பெங்களூர் பயணம்: புதிய பாதையின் சிறப்புகள்!

இரண்டு மணி நேரத்தில் சென்னை டூ பெங்களூர் பயணம்: புதிய பாதையின் சிறப்புகள்!

சென்னையில் இருந்து பெங்களூர் செல்வதற்கான 3வது வழித்தடம் வரும் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தின் மூலம் இரண்டு மணி நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றாக பெங்களூரும், சென்னையும் திகழ்கிறது. இந்த இரு நகரப் பகுதிகளும் மாநிலங்களினுடைய தலைநகராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த இரு நகரங்களிலும் அதிக அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு வகையான கல்வி நிலையங்கள், வேலை வாய்ப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளதால் இரு நகரங்களுக்கும் இடையேயான போக்குவரத்து மிகப் பிரதானமாக இருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் இந்த இரு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து என்பது மிகுந்த நெருசலோடு காணப்படும்.

இரண்டு நகரங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தற்போது இரண்டு வழித்தடங்கள் இருக்கின்றன. ஒன்று 335 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாதையும், மற்றொன்று 372 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மற்றொரு சாலையும் பயன்பாட்டில் இருக்கிறது. மேலும் இந்த சாலையின் பயண நேரம் என்பது 5 முதல் 7 மணி நேர பயண நேரத்தை கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஒன்றிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் சென்னை மற்றும் பெங்களூருவை இணைக்கும் 3வது அதிவிரைவு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பது, சென்னை மற்றும் பெங்களூர் செல்வதற்கான பயண நேரத்தை குறைக்கும் வகையில் பசுமை வழி அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணி டிசம்பருக்குள் முடிவடையும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த சாலை முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.

சென்னை மற்றும் பெங்களூரை இணைக்கும் பசுமை வழி அதிவிரைவு சாலையை பற்றி பார்ப்போம். இந்த சாலை 258 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இது குறிப்பிட்ட பகுதிகளுக்கான 3வது சாலை மார்க்கமாகும். இதன் மூலம் குறிப்பிட்ட தொலைவை 2 மணி நேரத்தில் அடைய முடியும். மேலும் தமிழ்நாட்டில் 116.6 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திராவில் 97.1 கிலோ மீட்டர் தூரமும், கர்நாடகாவில் 77.23 கிலோமீட்டர் தூரமும் இந்த சாலை பயணிக்கும். இது இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலை திட்டம் ஆகும்.

இந்த சாலை மார்க்கத்தில் 17 உயர் மட்ட மேம்பாலங்கள், 160 பாலங்கள் மற்றும் 23 கிலோ மீட்டர் தூரம் கொண்ட உயர்மட்ட மேம்பாலமும் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது 6 வழி சாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாலை அமைக்க 18,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசு 40 சதவீத நிதியை வழங்கி உள்ளது. மேலும் 60 சதவீத நிதியை மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக திரட்டப்பட்டுள்ளது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னை இருந்து பெங்களூரை இரண்டு மணி நேரத்தில் பூர்த்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com