சென்னை டு ஸ்ரீலங்கா: இரண்டாம் பகுதி!

Chennai To Sri Lanka Tourism - Jaffna Fort
Chennai To Sri Lanka Tourism - Jaffna Fort
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

இரண்டாம் நாள் 5.8.26.

இரண்டாம் நாள் பயணமாக ஜாப்னா ஃபோர்ட், நல்லூர் கந்தசாமி கோவில், ராமர் சேது பாலம் அமைந்துள்ள அனுராதாபுரம் ஆகியவற்றைக் காண்பதற்கு பயணம் மேற்கொண்டோம். காலை 7:00 மணிக்கு காலை உணவை (பிரேக்ஃபாஸ்ட்) எடுத்துக்கொண்டு 7.30 மணிக்கு தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கிளம்பினோம். முதலில் ஜாப்னா கோட்டையை பார்வையிட்டோம்.

Chennai To Sri Lanka Tourism -  Jaffna Fort
Chennai To Sri Lanka Tourism - Jaffna Fort

யாழ்ப்பாண கோட்டை (Jaffna Fort):

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண நகரின் அருகில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டை இது. 1618 ஆம் ஆண்டில் போர்துக்கீசியர்களால் கட்டப்பட்டது. பின்னர் டச்சு மற்றும் பிரிட்டானிய ஆட்சிக் காலங்களில் விரிவுபடுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டது. போர்த்துக்கீசிய தளபதி பிலிப் டி ஒலிவேரா என்பவரால் சதுர வடிவில் கட்டப்பட்டது.

1658 ல் டச்சுக்காரர்கள் இக்கோட்டையைக் கைப்பற்றி, பழைய சதுர வடிவமைப்பை உடைத்து, தற்காப்பு வசதிகள் நிறைந்த ஐங்கோண (Pentagon) விண்மீன் வடிவக் கோட்டையாக விரிவுபடுத்தினர். 1795இல் பிரித்தானியர்கள் இக்கோட்டையைக் கைப்பற்றி 1948 இல் இலங்கை சுதந்திரம் அடையும் வரை தங்களின் ராணுவ முகாம்களாகப் பயன்படுத்தினர்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com