

நான்காம் நாள் 7.8.26.
தம்புள்ளாவில் (Dambulla) தங்கியிருந்தோம். அங்கு கிளைமேட் ரொம்ப சில்லென்று இருந்தது. ஆனால் மனதுக்கு ரொம்பவும் சுகமாக (pleasent) இருந்தது. காலையில் 5:30 மணிக்கு எல்லாம் எழுந்து காலைக்கடன்களை முடித்து, குளித்து ரூமிலேயே கெட்டில் உதவியுடன் காபி சாப்பிட்டு 7 மணிக்கெல்லாம் கீழே இறங்கி, காலை உணவை (breakfast) முடித்துக் கொண்டு 8 மணிக்கெல்லாம் பஸ் ஏறியாச்சு.
நேராக முதலில் கதிர்காம கோவிலுக்கு சென்றோம். கதிர்காமத்தில் தமிழ் பேசுபவர்கள் மிகவும் குறைவு. முருகன் கோவிலில் வெள்ளை உடை உடுத்தி பௌத்தர்கள் தான் பூஜை செய்கின்றனர்.
சிகிரியா (Sigiriya Rock Fortress):
சிகிரியா என்பது இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான பாறைக் கோட்டையாகும். இது சுமார் 180 மீட்டர் (200 அடிக்கு மேல்) உயரம் கொண்ட செங்குத்தான பாறைக் குன்றின் மீது 5ஆம் நூற்றாண்டில் (கி.பி 477-495) காசியப்ப மன்னரால் உருவாக்கப்பட்டது.