சென்னை டு ஸ்ரீலங்கா: ஐந்தாம் பகுதி தொடர்ச்சி...

Chennai To Sri Lanka Tourism -  Ashok Vatika
Chennai To Sri Lanka Tourism - Ashok Vatika
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கண்டியில் எம் ஜி ஆர் வீடு: 

சொல்ல மறந்துவிட்டேனே! கண்டியில் எம்ஜிஆரின் வீட்டைக் கண்டு போட்டோவும் எடுத்தோம். அதனை இன்றும் அழகாக பராமரிக்கிறார்கள்; கமர்சியலாக வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். அதன் போட்டோவையும் மறக்காமல் ஷேர் செய்கிறேன். நேற்று (8.8.26 அன்று) நுவரெலியாவில் தங்குவதற்காக ஹோட்டலுக்கு செல்வதற்கு முன்பு காயத்ரி பீடம் சென்று தரிசித்தோம். அருமையான கோவில்; அழகாக தமிழ் பேசுகிறார்கள்.

நுவரெலியா காயத்ரி பீடம்:

மலைப்பகுதியில் உள்ளதால் இங்கு செல்லும்போது நன்கு இருட்டி விட்டது. மழையும் தூறிக் கொண்டே இருந்தது. புனித முருகேசு சித்தரால் 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு முக்கிய ஆன்மீக ஆசிரமம் இது. இங்கு ஸ்ரீலங்காதீஸ்வரர் மந்திர், சிவன் மற்றும் காயத்ரி தேவி கோவில்கள் உள்ளன.

ராமாயண காலத்தில் இராவணனின் மகன் மேகநாதர் (இந்திரஜித்) இங்கு தவம் செய்ததாக ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன. ராமாயண கதையின்படி இராவணனின் மகனான இந்திரஜித், ஸ்ரீ ராமர் மற்றும் லட்சுமணருக்கு எதிராக போருக்கு செல்வதற்கு முன்பு இங்கு அமர்ந்துதான் கடுமையான தவம் புரிந்து மகா சக்திகளைப் பெற்றதாக கூறப்படுகிறது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com