சென்னை டு ஸ்ரீலங்கா: ஆறாம் பகுதி!

Chennai To Sri Lanka Tourism -  Nine Arch Bridge
Chennai To Sri Lanka Tourism - Nine Arch Bridge
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

6ஆம் நாள் தொடர்ச்சி 9.8.26

ஒன்பது வளைவு பாலம் (Nine Arch Bridge):

பதுளை மாவட்டத்தில் எல்லா(Ella) மற்றும் தெமோதரை(Demodara) ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே பாலமாகும். பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள 'ஒன்பது வளைவுப் பாலம்' காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட ஒரு புகழ்பெற்ற இரும்புப் பாதை பாலமாகும்.

Chennai To Sri Lanka Tourism - Nine Arch Bridge
Chennai To Sri Lanka Tourism - Nine Arch Bridge

'வானத்தில் பாலம்' (Bridge in the Sky) என்றும் அழைக்கப்படும் இது எஃகு கம்பிகள் இல்லாமல் முற்றிலும் கல், செங்கல் மற்றும் சிமெண்டால் 1919ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. முதலாம் உலகப் போர் காரணமாக இரும்பு மற்றும் எஃகு தட்டுப்பாடு ஏற்பட்டதால், இந்தப் பாலம் எஃகு வலுவூட்டல் இல்லாமல் முற்றிலும் கற்கள், செங்கற்கள் மற்றும் சிமெண்ட் கொண்டு மட்டுமே கட்டப்பட்டது.

91 மீட்டர்(300 அடி) நீளமும், 24 மீட்டர் உயரமும்(சுமார் 80 அடி) கொண்டது. பிரிட்டன் ஆட்சியின் பொழுது உள்ளூர் உழைப்பைக் கொண்டு அதாவது ஸ்ரீலங்கன் இன்ஜினியர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com