சென்னை டு ஸ்ரீலங்கா: ஏழாம் பகுதி தொடர்ச்சி...

Chennai To Sri Lanka Tourism -  Lotus Tower
Chennai To Sri Lanka Tourism - Lotus Tower
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

7ஆம் நாள் தொடர்ச்சி.

மது ரிவர் படகு சஃபாரி (Madu River Boat Safari):

மது நதி காலி மாவட்டத்தில் பலப்பிட்டிய (Balapitiya) என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இதனை மது நதி அல்லது மது கங்கா என்று அழைக்கிறார்கள். இந்த நதி மற்றும் ஈரநிலப் பகுதி சுமார் 915 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது என்றார்கள். இந்த ஆறு 4.4 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து பின்பு இந்திய பெருங்கடலில் கலக்கிறது என்றார்கள்.

Chennai To Sri Lanka Tourism - Madu River Boat Safari
Chennai To Sri Lanka Tourism - Madu River Boat Safari

இது அழகிய சதுப்பு நிலக்காடுகள், பல சிறிய தீவுகள் மற்றும் வளமான உயிரினங்களைக் கொண்ட புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு படகு சவாரி மிகவும் பிரபலமானது. அமைதியான நீரில் படகு சவாரி மூலம் பயணிக்கலாம்.

கறுவாத் தீவு (Cinnamon Island) போன்ற சிறிய தீவுகளைப் பார்க்க முடிகிறது. இது இலங்கையின் மிக அழகான இயற்கை வளம் மிக்க ராம்சர் (Ramsar) சர்வதேச ஈரநிலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இங்கு நாங்கள் அடர்ந்த சதுப்புநிலக் காடுகளுக்கு நடுவே மோட்டார் படகில் பயணம் சென்றோம். மரங்களில் குரங்குகள் பழங்களைத் தின்பதையும், உடும்பு ஒன்று நீரில் மெதுவாக ஊர்ந்து செல்வதையும் கண்டு ரசித்தோம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com