குளிர்காலத்திற்கான சுற்றுலா தலத்தினை இப்போதே தேர்ந்தெடுங்கள்!

குளிர்காலத்திற்கான சுற்றுலா தலத்தினை இப்போதே தேர்ந்தெடுங்கள்!

ட்டுரையின் தலைப்பைப் பார்த்து திகைக்க வேண்டாம். இது குளிர்காலத்திற்கான சுற்றுலா தலங்களைப் பற்றிய கட்டுரைதான். குளிர்காலத்திற்கு இன்னும் 6 மாதம் உள்ளதே என்று நீங்கள் நினைப்பது என் காதில் விழுகிறது.

இந்த கட்டுரைக்கு காரணம் உள்ளது.

எந்த ஒரு பயணத்திற்கும் குறைந்தபட்சம் 4 மாதம் முதல் 6 மாதங்களுக்கு முன்பே திட்டமிடுதல் நல்லது. ஏனென்றால், அப்போதே திட்டமிட்டு விட்டால், விமானப் பயணச்சீட்டு மற்றும் தங்கும் விடுதி போன்றவற்றிற்கு கொடுக்கும் விலை குறைவாக இருக்கும். எந்த ஒரு விமான பயணத்திற்கும் பயணச்சீட்டினை 6 மாதத்திற்கு முன்பே வாங்கும்படி, பிரபல பயண நிபணர் ப்ரணவ் சூர்யா கூறுகிறார். இது இந்தியா மட்டுமன்றி, எந்த ஒரு வெளிநாட்டு பயணத்திற்கும் பொருந்தும். அதனைப் போலவே, தங்கும் விடுதிகளுக்கான பணத்திலும் அதிக பணத்தை சேமிக்க முடியும். சரி, குளிர்காலத்திற்கு எங்கு செல்வது என்று யோசிப்பாம்.

முதலில் தவிர்க்க வேண்டிய இடங்களைப் பார்ப்போம்.

குளிர்காலத்தில் குளிர் பிரதேசங்களுக்கு செல்வதற்கு பலர் விரும்புவதில்லை. ஏனென்றால், அப்போது, குளிர் பிரதேசங்களில், நிலவும் கடும் பனியில் நம்மால், நன்றாக இடங்களை கண்டு களிப்பது கடினம். ஜனவரி முதல் வாரத்தில், கொடைக்கானலில், பனிப் பொழிவு என்ற செய்தி, இதற்கு உதாரணம். எனவே, வெப்பம் சார்ந்த பகுதிகளை குளிர்காலத்தில் தேர்ந்தெடுப்பது நல்லது.

அடுத்து, வட இந்தியாவின் சுற்றுலாத் தலங்களைத் தவிர்க்க வேண்டும். வட இந்தியா கடல் பகுதிகளிலிருந்து மிகவும் விலகியுள்ளபடியால், குளிர் மட்டுப்படாத காரணத்தால், குளிர் அதிகமாக இருக்கும். டெல்லி போன்ற இடங்களில் குளிர்காலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும்.

அடுத்து செல்லக் கூடிய இடங்களைப் பார்ப்போம்.

தென்னிந்தியாவின் கடலோர சுற்றுலாத் தலங்கள், மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் கடலோர சுற்றுலாத் தலங்கள், சமவெளி பிரதேசங்களைச் சார்ந்த சுற்றுலாத் தலங்கள் செல்வதற்கு மிகவும் சிறந்தவை. குறிப்பாக, சென்னை, கேரளா, மங்களூர், விசாகப்பட்டினம், பாண்டிச்சேரி, கோவா, மும்பை, புவனேஸ்வர் போன்ற கடற்கரை சார்ந்த இடங்கள் மிகவும் குளிர் இல்லாமல், நல்லதொரு தட்ப வெட்ப நிலையிலிருக்கும்.

கேரளாவின் ஆழப்புழா படகு வீடுகள், தேக்கடி, எர்ணாகுளம் (கொச்சின்), திருவனந்தபுரம் போன்ற இடங்களும், தமிழ்நாட்டின் சென்னை, கன்யாகுமரி, ராமேஸ்வரம் போன்ற இடங்களும் மிகவும் நன்றாக இருக்கும். கர்நாடகாவின் பெங்களூரு, மைசூரு போன்ற இடங்கள், ஆந்திராவின் ஹைதராபாத், விஜயவாடா போன்ற இடங்கள், மத்திய பிரதேசத்தின் இந்தூர், போபால் ஒரிஸ்ஸாவின் புவனேஸ்வர் போன்ற இடங்கள் நன்றாக இருக்கும்.

தென்னிந்தியாவில் கீழ் நோக்கி செல்ல செல்ல, பூமத்திய ரேகையை நோக்கி நாம் செல்வதால், உஷ்ண பிரதேச தட்பவெப்பம் நிலவுவதால், குளிர் அதிகம் வாட்டாது. தமிழ் நாட்டின் திருச்சி, மதுரை, தஞ்சாவூர் கோவில்கள், ராஜாக்களின் அரண்மனைகளை காண்பதற்கு கூட குளிர்காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே, வெப்ப மண்டல பகுதியான (tropical) தென்னிந்தியாவின் பகுதிகளை கண்டுகளிக்க குளிர்காலத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குடும்பத்துடன் கலந்தாலோசித்து சுற்றுலா தலத்தினைத் தேர்வு செய்து விட்டு, இணையத்திற்கு சென்று குறைந்த விலையில் தங்கும் விடுதி மற்றும் விமானச் சீட்டினை எடுக்கப் பாருங்கள்.

உங்களது பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com