தென்னிந்தியாவின் ஸ்பா: குற்றால சீசன் 2026 - ரெடி ஆகிக்கோங்க மக்களே!

தேனருவி முதல் புலி அருவி வரை: குற்றாலத்தில் எந்த அருவி எதற்கு ஸ்பெஷல்?
Kuttralam Waterfall
Kuttralam Waterfall

ன்னும் இரண்டு மாதத்தில் குற்றால சீசன் ஆரம்பமாக உள்ளது. அதன் அருவிகளை பற்றி கட்டுரையில் பார்க்கலாம். திருநெல்வேலியில் இருந்து குற்றாலம் 62 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தென்காசியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த குற்றாலம் தென்னிந்தியாவின் ஸ்பா என அறியப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 520 அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஏராளமான அருவிகள் உள்ளன. ஒவ்வொரு அருவியும் கலந்து வருகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலத்தில் இங்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

முற்காலத்தில் குறுகிய ஆல மரங்கள் நிறைய காணப்பட்டதால் குறுகிய ஆலம் என்பது மருவி குற்றாலம் ஆனது. குற்றாலம் பகுதியில் மெயின் அருவி, தேனருவி, பாலருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, ஐந்தருவி ஆகியவை உள்ளன

1. குற்றாலம் மெயின் அருவி:

Kuttralam Main Waterfall
Kuttralam Main WaterfallImg credit: Thina boomi

குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி ஆகும். இது புத்தருவி எனவும் அறியப்படுகிறது. சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் விழுகிறது. இந்த அருவியின் மேல் பகுதியில் பத்தொன்பது மீட்டர் ஆழத்தில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது அதற்கு பொங்குமாங் கடல் என பெயர். இந்தப் பள்ளத்தில்தான் தண்ணீர் தேங்கி அருவியாக விழுகிறது.

இங்குள்ள பாறைகளில் சிவலிங்கங்கள் மற்றும் புராண கதைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த அருவியில் ஒரே நேரத்தில் சுமார் 300 நபர்கள் வரை குளிக்கலாம். இந்த அருவியின் முன்புறமுள்ள பாதுகாப்பு வளையத்தை தாண்டி அருவி விழுந்தால் குளிக்க அனுமதி இல்லை.

2. சிற்றருவி:

chitraruvi
chitraruviImg credit: AI Image

பெயருக்கு ஏற்றால் போல் சிறிய அருவியாக உள்ளது. இங்கு ஆண்களுக்கு குளிப்பதற்கு தனியாகவும், பெண்களுக்கு குளிப்பதற்கு தனியாகவும் வசதி உள்ளது. இந்த இடம் அடர்ந்த காடுகள் நிறைந்த வனப்பகுதியாகும். வெளிச்சம் குறைவாகக் காணப்படுகிறது. இங்கு இருந்து தான் மலை ஏறி செண்பகா தேவி அருவிக்கு செல்ல வேண்டும்

இதையும் படியுங்கள்:
கேரளாவிற்கு இணையான குளிர்ச்சி... தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு இடமா? மிஸ் பண்ணிடாதீங்க!
Kuttralam Waterfall

3. செண்பகாதேவி அருவி:

Senbhaga Devi waterfall
Senbhaga Devi waterfallImg credit: AI Image

மெயின் அருவிக்கு மேல் அமைந்துள்ளது. சிற்றருவி வழியாக மலை ஏறி செல்லவேண்டும். மெயின் அருவியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சிற்றருவியில் இருந்து 40 அடி உயரத்தில் உள்ளது. இங்கு செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த இடங்கள் முழுவதும் செண்பக மரங்கள் நிறைந்து காணப்பட்டன.

இங்குள்ள செண்பகாதேவி அம்மன் குற்றால நகரின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள். சித்ரா பவுர்ணமி அன்று செண்பகாதேவி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இங்குள்ள நீர்தான் பொங்குமாங் கடலுக்கு செல்கிறது.

4. தேனருவி:

thenaruvi
thenaruviImg credit: AI Image

மலை ஏற்றத்திற்கும் சாகச விளையாட்டுகளுக்கும் ஏற்ற பகுதி. மெயின் அருவியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குற்றால அருவியின் முதல் அடுக்காகும். இங்குள்ள மலைகளை சுற்றி மரங்கள் அதிக அளவில் உள்ளன. மரத்திலும் தேன் கூட்டை காணலாம். எனவே, இந்த இடம் தேன் அருவி எனப்பட்டது. செங்குத்துப் பாதை மற்றும் அடர்ந்த காடுகள் வழியே செல்ல வேண்டும். இங்கு வனத்துறை அனுமதி பெற்று தான் செல்ல முடியும்

இதையும் படியுங்கள்:
கொழுக்குமலை: அதிகாலை சூரிய உதயமும், ஆச்சரியமூட்டும் சிங்கப்பாறையும்!
Kuttralam Waterfall

5. ஐந்தருவி:

intharuvi
intharuviImg credit: AI Image

மிகவும் பிரபலமான அருவியாகும் பாறைகளில் இருந்து ஐந்து பிரிவாக தண்ணீர் விழுகிறது. அனைத்து வயதினரும் குளிக்க கூடிய வகையில் அற்புதமாக அமைந்துள்ளது.

இந்த அருவியை தூரத்தில் இருந்து பார்த்தால் ஐந்து தலை நாகம் படம் எடுப்பது போல் காட்சி அளிக்கும். இந்த அருவியில் இரண்டு பிரிவுகளில் பெண்களும் மூன்று பிரிவுகளில் ஆண்களும் குளிக்கும் வசதி உள்ளது.

இந்த அருவியை ஒட்டி ஒரு சாஸ்தா கோவிலும் ஒரு விநாயகர் கோவிலில் உள்ளது. சுற்றுச்சூழல் பூங்கா இதன் அருகில் உள்ளது. அருகில் இருக்கும் வெண்மடை குளத்தில் படகு சவாரி செய்து மகிழலாம். மெயின் அருவியில் இருந்து ஐந்தருவிக்கு செல்லும் பாதையில் ஓய்வு விடுதி, ரிசார்ட் தனியார் பங்களாக்கள் உள்ளன.

6. பழத்தோட்ட அருவி:

Pazhathotta Aruvi
Pazhathotta AruviImg credit: AI Image

பழத்தோட்டங்கள் மத்தியில் அமைந்துள்ளது இந்த அருவி. எனவே, பழத்தோட்ட அருவி என அறியப்படுகிறது. ஐந்தருவிக்கு மேல் பக்கம் அமைந்துள்ளது. இதற்கு விஐபி நீர்வீழ்ச்சி என்ற பெயர். இங்கு அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், அமைச்சர்கள் ஆகியோர் மட்டுமே செல்ல முடியும்.

மற்றவர்கள் சுற்றுலாத்துறை இடம் அனுமதி பெற வேண்டும். தோட்டக்கலைத் துறை சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் குழந்தைகள் பூங்கா உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com