ஏழாம் கண்டத்தில் துணிச்சல் மிகு பயணம்.

ஏழாம் கண்டத்தில் துணிச்சல் மிகு பயணம்.

லகின் ஏழாவது கண்டமான மனிதர்கள் வாழ முடியாத கடும் பனிப்பிரதேசமான அண்டார்டிகாவிற்கு செல்வதென்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகத் தான் இருந்தது இதுவரையில். இனி அண்டார்டிகா பயணம் செல்லவேண்டும் எனும் கனவில் இருப்பவர்களுக்கு அந்தக் கனவை நிஜமாக்குகிறது சேலம் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் நிறுவனம். ஆம் தமிழ் நாட்டிலேயே ஒரு குழுவாக அதிலும் 60 வயதுக்கு மேலானவர்களை அண்டார்டிகாவிற்கு அழைத்துச் சென்ற முதல் ட்ராவல்ஸ் எனும் பெருமையைப் பெறுகிறது சேலம் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் நிறுவனம்.

       24 வருடங்களாக சுற்றுலாவை மேற்கொள்ளும் இந்த  நிறுவனத்தின் சார்பில் சுமார் 75  நாடுகளுக்கு அனைவரையும் எந்தப் பிரச்சினையும் இன்றி அழைத்துச் சென்றுள்ளனர் என்பது சிறப்பு. பொதுவாகவே நாம் வீட்டை விட்டு வெளியிடங்களுக்கு செல்லும்போது ஏற்படும் வசதிக் குறைவுகளான தங்குமிடம், உணவு போன்றவைகளுக்கு அதிமுக்கியத்துவம் தந்து தங்கள் பயணிகளை சொகுசாக அழைத்துச்சென்று அந்த பயணத்தை தங்கள் வாழ்நாளிலே அவர்களால் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுவது குறிப்பிடத்தக்கது.

நிறுவனர் பாபு
நிறுவனர் பாபு

சுற்றுலாத்துறையில் முன் அனுபவமின்றி தனியொருவராக இறங்கி சாதாரணமாக தாய்லாந்தில் துவங்கிய ஒருங்கிணைப்பு பயணம் 24 வருடங்களில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என உலகம் முழுவதும் உள்ள நாடுகளை படிப்படியாக பயணத்தில் விரிவுப்படுத்தி தற்போது அண்டார்டிகா சென்றதன் மூலம் ஏழு  கண்டங் களுக்கும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று சாதனை படைத்த  நிறுவனமாக மாற்றிக் காண்பித்துள்ளார் சேலத்தில் இயங்கி வரும் சேலம் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ன் நிறுவனர் பாபு.

    அண்டார்டிகா பயணம் பற்றி அவர் கூறியது...

       ழாவது கண்டத்தை தொட்டு அங்கு நம் நாட்டின் தேசியக்கொடி ஏற்றியபோது எழுந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாங்கள் சென்று வந்த பின்தான் குழுவாக அங்கு சென்று வந்த முதல் நிறுவனம் நாங்கள் என்பதை அறிந்தேன். இந்த பயணத்துக்கான திட்டமிடலை 2016 லிலேயே துவங்கி விட்டோம். காரணம் என் மதிப்புமிக்க பயணிகளே.

2016 ல் பிரேசில் அர்ஜென்டினா, பெரு, நாடுகளுக்கு சென்ற போது வந்தவர்கள் அருகில் உள்ள அண்டார்டி காவிற்கும் போகும் வாய்ப்புக் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனக் கேட்கவே அவர்களின் விருப்பத்தை ஏற்று அண்டார்டிகா பயணத்தை திட்டமிட்டேன். 2016 ல்  இருந்து அந்த நாட்டைப் பற்றியும் அதற்கு செல்லும் முறைகள் குறித்துமான எனது தேடல் முடிந்து 2020ல் ஆர்வத்துடன் துவங்கிய பயணம் பிரேசில் சென்று அங்கிருந்து அர்ஜென்டினா செல்ல ஆயத்தமாக இருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட கொரானாவினால் அங்கு செல்லத் தடை விதித்ததால் பாதியில் ரத்து செய்து செய்து திரும்பும்படி ஆயிற்று.

     ஆனால் அந்த நாட்டின் கப்பல் மற்றும் போக்கு வரத்துக்காக  நாங்கள் கட்டிய தொகையை திரும்பத் தர மறுத்து தடைகள் விலகியதும் நீங்கள் விரும்பும்போது அதே பயணத்தை தொடருங்கள் என அனுமதியும் தந்ததால் திரும்ப அனைவரும் ஒன்றிணைந்து அந்த பயணத் திட்டத்திலேயே இப்போது சென்று வந்தோம்.

     பயணம் செல்ல முடிவு செய்யப்பட்ட 16 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டிலிருந்து அண்டார்டிகா செல்லும் முதல் குழு. பயணமாக 2023 ஆம் வருடம் பிப்ரவரி 22 ந்தேதி துவங்கி மார்ச் 13 ல் வெற்றிகரமாக நிறைவு செய்தோம். பதினொரு நாட்கள் அண்டார்டிகா கப்பலில் புதுப்புது அனுபவங்கள். முக்கியமாக உணவில் சமரசமின்றி சாதம் தயிர் போன்றவைகளும் இருந்தது அனைவரையும் மகிழவைத்த ஒன்று.

     பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப் பட்டுள்ளது எனலாம். ஆண்டில் ஆறு மாதங்கள் வெளிச்சமே இருக்காது. ஆண்டுக்கு 200 மில்லி மீட்டர் அளவு மழை மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டி பாலை நிலமாகும். இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, மனிதர்கள் வசிக்கவும் ஏற்ற இடம் இல்லை உலகிலேயே கொடுமையான குளிரும் மைனஸ் 89 டிகிரி செல்சியஸ் பனிக்காற்றும் வீசும் உலக அதிசயமாக திகழ்கிறது இந்த கண்டம்.

ஆகவேதான் குழுவாக அழைத்துச்  செல்வது என்பது ரிஸ்க்கான விஷயம் என்பதால் பல ட்ராவல்ஸ் தவிர்த்து விடுவதுண்டு. அங்கு செல்வதற்கு மனதைரியம் வேண்டும். அத்துடன் எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் துணிவு வேண்டும். ஆனால் அங்கு சென்ற பின் கிடைக்கும் இயற்கையின் அதிசயக் காட்சிகள் பட்ட சிரமத்தை மறக்கடித்து இதுதான் சொர்க்கம் என எண்ண வைக்கும் என்பதுதான் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com