தவாங் இயற்கையின் அழகுப் பிரதேசம்!

Dawang is a natural beauty spot!
Payanam article
Published on

ந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது.

வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது. இங்குள்ள தவாங் மடாலயத்தின் பெயரிலேயே இந்தப்பகுதி அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தவாங் நகரத்தை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு மலைப்பகுதியின் விளிம்பில் இந்த தவாங் மடாலயம் ஒரு அற்புத தெய்வீக தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. 

த’ என்பது குதிரையையும் ‘வாங்’ என்பது ‘தேர்ந்தெடுத்த’ என்பதையும் குறிக்கிறது. வழங்கி வரும் கதைகளின்படி, இந்த மடாலயம் அமைந்திருக்கும் இடமானது மேராக் லாமா லோட்ரே கியாம்ட்சோ எனும் மதகுரு வைத்திருந்த குதிரை தேர்ந்தெடுத்த ஸ்தலமாக சொல்லப்படுகிறது.

ஒரு மடாலயம் அமைப்பதற்கு ஏற்ற ஒரு ஸ்தலத்தை இந்த மேராக் லாமா லோட்ரே கியாம்ட்சோ தேடிக்கொண்டிருந்தபோது அதற்கேற்ற இடத்தை அவரால் முடிவு செய்ய இயலவில்லை. எனவே அவர் தியானத்தில் அமர்ந்து இறைவழிகாட்டலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். பின்னர் தியானம் முடிந்து அவர் கண்விழித்தபோது தனது குதிரை காணாமற்போயிருப்பதை தெரிந்துகொண்டார். 

குதிரையை தேடித்திரிந்த அவர் இறுதியில் அது ஒரு மலையின் உச்சியில் நிற்பதை கண்டார். மடாலயம் அமைப்பதற்கேற்ற இடம் குறித்த இறைவழிகாட்டல் தனது குதிரை மூலமாக கிடைத்தது போன்று அவர் உணர்ந்தார்.

இதையும் படியுங்கள்:
பஞ்சலிங்க நீர்வீழ்ச்சிக்கு ஜாலியா ஒரு பயணம் போகலாம் வாங்க!
Dawang is a natural beauty spot!

எனவே ‘குதிரை தேர்ந்தெடுத்த இடம்’ எனப்பொருள்படும் ‘தவாங்’ என்ற பெயரில் அந்த ஸ்தலம் அழைக்கப் படலாயிற்று.   தூய இயற்கைச்சூழலும், பிரமிப்பூட்டும் மலை எழிற்காட்சிகளும் நிறைந்த சொர்க்கபூமி போன்றே இந்த தவாங் நகரம் காட்சியளிக்கிறது.

சூரிய உதயத்தின் கதிர்கள் இப்பகுதியிலுள்ள சிகரங்களில் பட்டுத்தெறிப்பதும் சூரிய அஸ்தமனத்தின் வெளிச்சம் தொடுவானமெங்கும் கவிழ்ந்திருப்பதும் வேறெங்கும் காணக்கிடைக்காத தரிசனங்களாகும். 

தவாங் மலைவாசஸ்தலம் மற்றும் ஒட்டியுள்ள சுற்றுலா அம்சங்கள் தவாங் மலைநகரத்தில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி விஜயம் செய்யும் அம்சங்களாக மடாலயங்கள், சிகரங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை அமைந்திருக்கின்றன. தவாங் மடாலயம், சேலா பாஸ் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இங்குள்ள நீர்வீழ்ச்சிப்பகுதிகள் பாலிவுட் படப்பிடிப்புகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நிசப்தம் தவழும் ஏரிப்பரப்பு, ஆறுகள் மற்றும் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள் நீல நிற ஆகாயத்தை பிரதிபலித்தபடி காட்சியளிப்பது பார்வையாளர்களை மெய்மறக்க செய்யும் அற்புத தோற்றங்களாகும். சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது அவசியம் இங்கு ஒருமுறை சென்று வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com