உலகின் மிகப்பெரிய ‘மஜுலி’ நதித் தீவு நம் நாட்டில் உள்ளது தெரியுமா?

‘மஜுலி’ நதித் தீவு!
‘மஜுலி’ நதித் தீவு!

ந்தியாவின் வடக்கிழக்கே உள்ள அசாமில் உலகின் மிகப்பெரிய நதித் தீவு (river island) உள்ளது என்பது யாருக்கெல்லாம் தெரியும்? ஆம்! மஜுலி தீவு என்று அழைக்கப்படும் இந்த தீவு மிகப் பெரிய நதித் தீவு என்று (352 சதுர கி.மீ.) கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது.

100 வருடங்களுக்கும் மேலாக, இந்த தீவு பாரம்பரிய கலை, கைவினைப் பொருட்களின் இருப்பிடமாக இருந்துவருகிறது. ஆனால், 25 வருடங்களுக்கு முன்பாக இப்படி ஒரு சுற்றுலாத்தலம் உள்ளது என்பதே இந்தியாவில் முக்கால்வாசி பேருக்குத் தெரியாமலே இருந்தது. இயற்கை அழகு கொஞ்சும் மஜுலி தீவில் நாம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி தெரிந்துகொள்வோமா?.

1. படகு சவாரி

படகு சவாரி
படகு சவாரி

ஜுலி தீவுக்கு செல்ல வேண்டும் என்றாலே படகில்தான் செல்ல வேண்டும். அங்குள்ள படகுகளில் 9 வாகனங்கள் வரை ஏற்றிக்கொள்ளலாம். பொதுவாக அங்கு சுற்றிப் பார்க்க வருபவர்களின் வாகனங்களாகத்தான் அவை இருக்கும். பயணிகள் அமர குறுகிய இடம்தான் இருக்கும்.

அசாமின் ஜோர்ஹட் என்ற இடத்தில் இருந்து மஜுலி தீவு செல்ல சுமார் ஒரு மணி நேரம் ஆகும். செல்லும்போதே பிரம்மபுத்ரா நதியின் அழகை ரசித்துக்கொண்டே செல்லலாம்.

2. சத்திரங்கள்

சத்திரங்கள்
சத்திரங்கள்

ஜுலி தீவில் மொத்தம் 64 சத்திரங்கள் உள்ளன. அவை வைஷ்ணவ துறவிகளால் பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள துறவிகள் சத்திரங்களைப் பராமரிப்பதோடு பல கலைகளிலும் கைவினைப் பொருட்கள் செய்வதிலும் ஈடுப்பாட்டுடன் இருக்கிறார்கள். சத்திரங்களிலும் பாரம்பரியமான கல்வெட்டுகள், சிலைகள் மற்றும் கட்டடக்கலைகளின் நுட்பங்களைப் பார்க்கலாம்.

அங்குள்ள ஒரு சத்திரத்தில் ஹிமாலய மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட துளசி மாடம் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கிறது. இங்கு விற்கப்படும் கைவினைப் பொருள்கள் நிச்சயம் கலைப்பிரியர்கள் தங்கள் வீட்டில் வைத்து அழகுப் பார்க்க நினைக்கும் பொருள்களாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கோயிலில் அர்ச்சனை செய்வது ஏன்?
‘மஜுலி’ நதித் தீவு!

3. மிஸ்ஸிங் கிராமம்

மிஸ்ஸிங் கிராமம்
மிஸ்ஸிங் கிராமம்

ஜுலி தீவில் வைஷ்ணவர்களுக்கு முன்னர் மிஸ்ஸிங் பழங்குடி மக்கள்தான் வசித்து வந்தார்கள். மிக மிகப் பழமையான பழங்குடி இனத்தவர்களாகிய இவர்கள் விவசாயம் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வதில் மிகவும் தேர்ச்சிப் பெற்றவர்கள். அந்த மக்கள் வெளி ஊரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஆடிப் பாடியும், பல விளையாட்டுகள் விளையாடியும், அரிசி பானம் கொடுத்தும் வரவேற்பார்கள். இவர்கள் இங்குள்ள மலை சரிவுகளில்தான் குடிசை அமைத்து தங்கியுள்ளார்கள். இந்த இடம் நிச்சயமாக நாம் பார்க்க வேண்டிய இடம்தான்.

4. ஹல்மோரா கிராமம்

ஹல்மோரா கிராமம்
ஹல்மோரா கிராமம்

ந்த கிராம மக்கள் மிக மிகப் பாரம்பரியமான பானைகள் செய்வதில் வல்லுநர்கள். எவ்வளவு தொழில் நுட்பம் மாறினாலும் காலம் காலமாக பானை செய்யும் தொழிலையே செய்துவருகின்றனர். இவர்கள் இதற்கு முன்பு தீவின் கரையில்தான் வசித்து வந்தார்கள். ஆனால், 90களில் மண் அரிப்பு ஏற்பட்டு அவர்கள் அந்த தீவின் வேறு இடத்திற்கு சென்று வசிக்கத் தொடங்கினார்கள். இவர்கள் கரையில் உள்ள மணல் எடுத்துதான் பானை செய்து வந்தார்கள். இந்த மண்ணரிப்பை தடுக்க அரசு சுவர் எழுப்பியது. இதனால் அங்கு களிமண் குறைவாகி பானை தயாரிப்பதும் குறைவானது.

இந்த மக்களில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு சின்ன வீடு மற்றும் பெரிய வீடு கட்டிவைத்துக் கொள்வார்கள். வெயில் மற்றும் குளிர்காலங்களில் சிறிய வீடையும் மழைக் காலங்களில் பெரிய வீடையும் பயன் படுத்துவார்கள் என்பது மிக சுவாரஸ்யமான தகவல்!

5. ராஸ் லீலா நாடகம்

ராஸ் லீலா நாடகம்
ராஸ் லீலா நாடகம்

ங்குள்ள பக்தர்கள் இணைந்து நடத்தும் நாடகம் ராஸ் லீலா. இந்த நாடகம் கிருஷ்ணனுக்கு நன்றித் தெரிவிக்கும் விதமாக இருக்கும். இதற்கான நுழைவு கட்டணம் 300 ரூபாய்.

கலையையும் இயற்கையையும் ஒருசேர ரசிக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த மஜுலி தீவிற்கு ஒரு முறையாவது சென்று வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com