தமிழ்நாட்டில் வெள்ளி கடற்கரை எங்கே இருக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் வெள்ளி கடற்கரை எங்கே இருக்கு தெரியுமா?
Published on

சென்னையில் இருப்பது தங்க கடற்கரை. அதேபோல் தமிழ்நாட்டில் சில்வர் பீச் வெள்ளி கடற்கரை உள்ளது. குழந்தைகளோடு சுற்றுலா வர மிக அருமையான இடம் அற்புதமான சூழ்நிலை. எங்கே இருக்கு என்று பார்ப்போமா?

ந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில்வெள்ளி கடற்கரை அமைந்துள்ளது. இது கடலூர் நகரத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. இருப்பினும், வெள்ளி கடற்கரையினால் எந்த பாதிப்பும் நகரத்திற்கு ஏற்படுவதில்லை.

கோரோமாண்டல் கடற்கரையில் இரண்டாவது நீண்ட கடற்கரையும், ஆசியாவின் மிக நீண்ட கடற்கரையோரங்களில் இதுவும் ஒன்றாகும்.

டற்கரையின் 57 கிமீ நீளமான கடற்கரை கடுமையான முகத்துவார அரிப்பு ஏற்படுகிறது. கடலூர் நகரபேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி கடற்கரை கடற்கரை இடையே அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் மூலமாகவும் இங்கு செல்லலாம். கடற்கரைக்கு தெற்கே உள்ள தெற்கு கடலூர் ஒரு தனி தீவு போல தோன்றுகிறது. முகத்துவார நீர் தீவு போன்ற அமைப்பிலிருந்து பிரதான கடற்கரையை பிரிக்கிறது.

நீர்விளையாட்டுகளுக்கு ஏற்ற பாதுகாப்பான இடம். தற்போது படகு குழாம் மூடப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி உள்ள ஒரு நதியில் உள்ள அடர்ந்த மாங்குரோவ் காடுகளில் பறவைகள் தங்குவதற்கு ஏற்றசூழல் இருக்கிறது.

க்கடற்கரையில் நூற்றாண்டு பழமையான கலங்கரை விளக்கமும், ஒரு சில ஓய்வு இல்லங்களும் அமைந்துள்ளது. சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக மாநில அரசாங்கத்தின் பங்களிப்பாக பெரும்பாலான ஓய்வு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் பேரரசினால் கட்டப்பட்ட3 முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள செயிண்ட் டேவிட் கோட்டை, வெள்ளி கடற்கரைக்கு அருகாமையில் உள்ளது.

பெரியார் கலை மற்றும் அறிவியல் கலைகல்லூரி, கடற்கரைக்கு அருகில் உள்ளது. ஏப்ரல் அல்லது மே வெள்ளி கடற்கரையில் ஆண்டுதோறும் மாதங்களில் கோடை விழா கொண்டாடப்படுகிறது.

மிழ்நாடு, நாகப்பட்டினத்திற்கு அடுத்தபடியாக இந்த கடற்கரை 2004 ல் ஏற்பட்ட ஆசிய சுனாமியால் இரண்டாவது மிக அதிக பாதிப்புள்ள பகுதியாக இருந்தது. இச்சுனாமியால் சுமார் 2,700 க்கு அதிகமானவா்கள் இப்பகுதியில் இறந்திருக்கிறார்கள்"

வார விடுமுறை நாட்களில் சென்னை கடற்கரையில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது அதேபோல் இந்த வெள்ளி கடற்கரையும் நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகளால். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது நீங்களும் வெள்ளிக் கடற்கரைக்கு வந்து விளையாண்டு மகிழலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com