ஸ்ட்ராபெர்ரி பூக்கள் மணக்கும் மகாபலேஷ்வர் – எங்கே இருக்கு தெரியுமா?

ஸ்ட்ராபெர்ரி பூக்கள் மணக்கும் மகாபலேஷ்வர் – எங்கே இருக்கு தெரியுமா?

ந்தியாவில் தெற்கு பகுதிக்கு ஊட்டி, வடக்கிற்கு குலு மணாலி, கிழக்கில் டார்ஜிலிங் என்றால் மேற்குக்கு மகாபலேஷ்வர் என்று சொல்லலாம். அழகான அமைதியான மலைப்பிரதேசம். புனாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ளது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர பயணத்தில் ஊரை அடையலாம்.

வளைந்து வளைந்து மேலே மேலே சென்று நெருங்கும் போதே பூக்கள் பூத்துக் குலுங்கி 'வா' என்று வரவேற்கின்றன. ஏதோ ஒரு வித்தியாசமான மணம் கமிழ்கிறதே என்று நினைத்தால் ஸ்ட்ராபெர்ரி பூக்களின் வாசனையாம் அது!

முகில் வருடும் மலைச் சிகரங்கள், பச்சை போத்திய மலைச் சாரல்கள், கிடு கிடு பள்ளத்தாக்குகள், மலைகளிடையே வளைந்து நெளிந்து ஓடும் நதிகள், மனத்தை மயக்கும் அருவிகள், - இதுதான் மகாபலேஷ்வர்.

எப்படி செல்லலாம்?

*அருகிலுள்ள ரயில் நிலையம் சதாரா. வசதியாகச் செல்ல புனே பெஸ்ட்.

* மும்பை - மகாபலேஷ்வர் செல்ல மும்பை, புனே, சங்க்லி, சதாராவிலிருந்து மாநிலப் பேருந்துகள் இயங்குகின்றன.

* அருகிலுள்ள விமான நிலையம் புனே.

தங்குமிடம்:

* மகாபலேஷ்வரில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்ற பட்ஜெட் ஹோட்டல்கள், ஸ்டார் ஹோட்டல்கள், ரிஸார்ட்ஸ், ரெஸ்டாரண்டுகள் அமைந்துள்ளன. தனியார் மட்டுமல்லாமல்  பயணிகள் வசதிக்காக மாநில அரசும் தங்குமிட வசதிகளை செய்து கொடுக்கிறது.

எப்போது செல்லலாம்?

* அக்டோபர் முதல் ஜூன் வரை சுற்றுலா செல்ல ஏற்ற சீஸன். மார்ச் - ஜூன் வரை கோடை காலத்தை இங்கே கொண்டாடி மகிழலாம்.

* ஜூன் - செப்டெம்பர் 'ஹனிமூன்' செல்ல உகந்த காலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com