கனவுப் பயணம்: உலகளவில் அதிகம் பேர் விரும்பும் முதல் 5 நாடுகள்!

Tourist attractions
Dream trip in the world

லகில் உள்ள மக்கள் அனைவரும் மற்ற நாடுகளை சுற்றிப் பார்த்து, அவர்களின் உணவு, உடை, கலாச்சாரம், விருந்தோம்பல் ஆகியவற்றை அறிய விரும்புகிறார்கள். அவர்கள் 2025 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பி சென்ற முதல் 10 நாடுகளின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அந்த நாடுகள் பின்வருமாறு.

1. பிரான்ஸ் 

Tourist attractions
பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் உலகின் பேஷன் தலைநகராகவும் உள்ளது. இந்த ஊர் மாடல்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள், ஆபரண தயாரிப்பாளர் களின் சொர்க்க பூமியாக உள்ளது என்றால் மிகையல்ல. பாரீஸ் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை கொண்டுள்ளது. ஈபிள் டவர் இந்த நாட்டின் முக்கிய சுற்றுலா அடையாளமாக இருக்கிறது. மேலும் 300க்கும் மேற்பட்ட விசித்திரக் கோட்டைகளைக் கொண்ட லோயர் பள்ளத்தாக்கு மற்றும் பிரெஞ்சு ரிவியரா கடற்கரைகள் பயணிகளை கவர்கிறது.

பிரான்ஸ் பேக்கரிகளில் செய்யப்படும் வெண்ணெய் கலந்த குரோசண்ட்கள், கேசௌலெட், மிருதுவான கேக்குகள் உணவுப் பிரியர்களுக்கு சரியான தீனியாக இருக்கும். சுமார் 9 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள பிரான்ஸ், சுற்றுலா பயணிகளை அதிகம் ஈரத்ததில் முதலிடத்தில் உள்ளது.

2. ஸ்பெயின்

Tourist attractions
ஸ்பெயின்

காளைச்சண்டைக்கு பெயர் பெற்ற ஸ்பெயின் தனது வளமான கலாச்சாரத்திலும் சிறப்பான உணவு வகைகளாலும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது. பாம்ப்லோனாவில் நடைபெறும் காளைகளின் ஓட்டம், புனோலில் லா வில் நடைபெறும் தக்காளி சண்டைகள் ஸ்பெயின் நாட்டின் சுவாரசிய அம்சமாக உள்ளன. அன்டோனி கௌடியின் சிறப்பான கட்டிடக்கலை, பிராடோ அருங்காட்சியம், கிரனாடாவில் உள்ள அல்ஹம்ப்ரா அரண்மனை , ஸ்பெயினின் தங்கக் கடற்கரைகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. 

பட்டாடாஸ் பிராவாஸ், ஜாமோன் இபெரிகோ மற்றும் ஸ்பெயின் கடல் உணவுகள் புகழ் பெற்றவை. ஐரோப்பாவின் சிறந்த உணவாக ஸ்பானிஷ் உணவுகளை குறிப்பிடலாம். உலகளவில் 8.37 கோடி பயணிகள் ஸ்பெயின் நாட்டை சுற்றிப்பார்த்துள்ளனர்.

3. அமெரிக்கா 

Tourist attractions
அமெரிக்கா

உலகின் சுப்ரீம் பவர் நாடான அமெரிக்கா அதன் பிரம்மாண்டத்திற்கும் வானளாவிய கட்டிடங்களுக்கும் புகழ் பெற்றது. ஹாலிவுட் ஸ்டுடியோக்கள், டிஸ்னி லேண்ட் , பெரிய தேசிய பூங்காக்கள், பெரிய பல நகரங்கள், பெரிய மால்கள் , அழகான கடற்கரைகள் ஆகியவை பலரின் கனவு தேசமாக இருக்கும் அமெரிக்காவின் சுற்றுலாத் தளங்களை கூட்டத்தால் நிரப்புகின்றன. 

பலவகை கலாச்சாரங்கள், பல நாட்டு உணவுகள் ஆகியவை அறியவும் ருசிக்கவும் ஏற்ற நாடு. விதவிதமான பாஸ்ட் புட் கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு. முழு நாட்டை ஒரே முறையில் சுற்றி பார்க்க முடியாது என்பதால் மீண்டும் மீண்டும் பயணிகளை ஈர்த்து விடுகிறது. கடந்த வருடம் 7.93 கோடி சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவை சுற்றிப் பார்த்துள்ளனர்.

4. சீனா 

Tourist attractions
சீனா

சீனா பழமையான கலாச்சாரத்தை கொண்டுள்ள ஒரு புதுமையான நாடு. பழமையான கோயில்கள், அரண்மனைகள் ஒரு கலாச்சார அனுபவத்தையும், புதுமையான கட்டிடங்களும் , சீனாவின் தொழில் நுட்பங்களும் புதிய அனுபவத்தையும் கொடுக்கும். சீனப் பெருஞ்சுவர் மற்றும் பிரம்மாண்டமான கடவுள் சிலைகள் சுற்றுலாவாசிகளின் கண்களை பெரிய அளவில் விரிய வைக்கிறது.

சீனச் சந்தைகளில் மலிவு விலையில் பொருட்களை அள்ளி செல்ல ஒரு கூட்டம் வருகிறது .சீனாவின் விசித்திரமான உணவு வகைகள் வித்தியாசமான ருசி தேடுபவர்களுக்கு விருந்தாக அமைகிறது. 2024 ஆம் ஆண்டில் 6.57 கோடி சுற்றுலா பயணிகள் சீனாவை ரசித்துள்ளனர்.

5. இத்தாலி 

Tourist attractions
இத்தாலி

உலகின் பழமையான கலாச்சாரத்தின் எஞ்சியுள்ள ரோம் நகர கட்டிடக்கலை, கொலோசியம், பழங்கால சர்ச்கள், புராதான கோயில்கள் ஆகியவை ரோமின் பெருமையை பறைசாற்றும். கடலில் மிதக்கும் நகரமான வெனிஸ், பைசா நகரம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் இத்தாலியில் உள்ளன.

சிறிய நாடான இத்தாலியில் போகும் இடம் எல்லாம் சுற்றுலாத் தளமாகவும், காணும் இடமெல்லாம் கட்டிடக் கலையின் பொக்கிஷமாகவும், போதாத குறைக்கு இயற்கை எழிலும் கொஞ்சும் பூமியாக உள்ளது. பீசா, பாஸ்தா, மக்ரோனி, ஸ்பகட்டி  உள்ளிட்ட இத்தாலிய உணவு வகைகள் உலகில் சிறந்த உணவுகளில் ஒன்றாக உள்ளது. உலகளவில் 6.45 கோடி சுற்றுலாப் பயணிகளை கடந்த ஆண்டு இத்தாலி ஈர்த்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com