ஜெர்மனியில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய ஒரு இடம் Dresden! ஏன் தெரியுமா?

Dresden Images
Dresden ImagesImge credit: Wallpaper Abyss - Alpha Coders

ஜெர்மனிக்கு நீங்கள் பயணம் செய்தால் முக்கியமாக ட்ரெஸ்டன் நகரத்திற்கு சென்று சுற்றிப்பாருங்கள். ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினிலிருந்து ட்ரெஸ்டன் செல்ல 2 மணி நேரம் தான் ஆகும். ஓவியக் கலையும் வரலாறும் கலாச்சாரமும் நிறைந்த ஒரு இடம் ட்ரெஸ்டன்.

ட்ரெஸ்டன் உங்களுக்கு ஒரு தனி வைப் கொடுக்கும் இடமாகும். அதுமட்டுமல்லாது அங்குள்ள பழமை வாய்ந்த கட்டடங்கள் மிகவும் தனித்துவமாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்கும். ட்ரெஸ்டன் நகரம் பழங்காலத்தில் பல போர்களால் முழுவதுமாக சேதமாக்கப்பட்டது. அதனை மீண்டும் கண் கவரும் வகையில் புதுப்பித்து மறு ஜெனனம் கொடுத்துள்ளது ஜெர்மன் அரசு. மேலும் பல இடங்களையும் பழமை வாய்ந்தவைகளையும் முழுவதுமாக அழித்துவிடாமல் அதனைப் பாதுகாத்தும் வருகின்றனர்.

அந்த வகையில் ட்ரெஸ்டன் நகரின் ஆறுகளின் சுற்றுப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சுவர்களில் பழங்காலத்து சுவரோவியங்களை நீங்கள் பார்க்கலாம். அந்த ஓவியங்கள் ஆழ்ந்த அர்த்தங்களும் அற்புதங்களும் நிறைந்தவை. ட்ரெஸ்டன் ஆற்றுப்பக்கம் வரைந்திருக்கும் இந்த சுவரோவியங்கள் மட்டுமே போரினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பியவை. இதுவே அனைத்தும் அழிந்தாலும் அந்த இடத்தில் கட்டாயம் ஒன்று முழுமையாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்ததாக அந்த நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்.

அடுத்ததாக ட்ரெஸ்டனில் நீங்கள் செல்ல வேண்டிய ஒரு இடம் Frauenkirche church. இந்த இடம் ஒரு அமைதியான இடமட்டமல்லாது பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும் அளவிற்கு கட்டுமானம் இருக்கும். ஒவ்வொரு நுனுக்கங்களும் இதனை எப்படி வடிவமைத்திருப்பார்கள் என்ற சந்தேகத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும் வ்கையில் இருக்கும்.

Frauenkirche church
Frauenkirche churchImge credit: Rethinking the Future

வரலாற்று மற்றும் கலைப் பிரியர்கள் என்றால் கட்டாயம் ட்ரெஸ்டனில் உள்ள அருங்காட்சியகத்திற்கு செல்ல வேண்டும். இங்கு அதிகப்படியான ஓவிய கண்காட்சி இடங்களும் உள்ளன. முதலில் ஜெமால்ட் ஓவிய கண்காட்சி (Gemalddalerie) இடத்திற்கு செல்லலாம். இங்கு பிரபல ஓவியரான சிஸ்டின் மடோனாவின் (Sisitine madona) ஓவியங்களும் ரோமன் மற்றும் கிரேக்க பேரரசுகளின் பழங்கால ஓவியங்களும் அதிகம் உள்ளன. அதேபோல் கேர்ரவஜியோ ( Carravagio ) என்ற பிரபல யூரோப் ஓவியரின் ஓவியங்களையும் பார்க்கலாம்.

அதன்பின்னர் Green vault என்ற அருங்காட்சியகம் சென்று சுற்றிப் பார்க்கலாம். இங்கு இடைக்கால ஓவியங்கள், ஒட்டோமன் (Ottoman) படைகளின் ஓவியங்கள் மற்றும் முகலாயர்கள் சிம்மாசனங்களின் ஓவியங்களை அதிகம் பார்க்கலாம்.

Green vault museum
Green vault museumImge credit: CGTN

பின்னர் 1709ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்விங்கர் கோட்டைக்குச் (Zwinger palace) செல்லலாம். இந்த கோட்டையுடன் சேர்த்து கச்சேரி அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்கள் Gottfried simper என்ற பிரபல கட்டடக் கலைஞரால் கட்டப்பட்டன. இது போருக்குப் பின்னர் 1950 களில் மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது.

Zwinger palace
Zwinger palaceImge cred: 7toucans

செம்பெரொப்பெர் (Semperoper) என்ற அரங்கில் நடக்கும் பேலட் நடனம் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று. இதன் கட்டடக் கலை பேலட் நடனத்திற்கு ஏற்றவாரு கட்டப்பட்டிருக்கும் என்பதால் தனித்துவமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஓமன் நாட்டிற்குப் பயணமா? இந்த 10 சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிஞ்சுக்கோங்க!
Dresden Images
Elbhe river
Elbhe river

இறுதியாக எல்பே ஆற்றின் (Elbhe river) அழகான காட்சியைப் பார்த்துவிட்டு ட்ரெஸ்டன் நகரத்தை விட்டு வெளியேறினால் ஒரு அழகான மற்றும் சுவாரசியமான அனுபவத்தைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com