விசாகபட்டினத்தில் பார்த்தே ஆகவேண்டிய எட்டு இடங்கள்!

visakhapatnam
visakhapatnam

1. யாரடா கடற்கரை: yarada beach

yarada beach
yarada beach

யாரடா கடற்கரையானது அதனுடைய அமைதியான நிலப்பரப்பு மற்றும் நீருக்காக விசாகப்பட்டினத்திற்கு சுற்றுலா செல்வோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு கடற்கரை பகுதியாகும். இது ஒருபுறம் வங்காள விரிகுடாவையும் மறுபுறம் அற்புதமான மலைகளையும் கொண்டுள்ளது. மேலும் இது கடற்கரை விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல சிறந்த இடமாக அமைகிறது.

2. கடிகி நீர்வீழ்ச்சி: kodige falls

kodige falls
kodige falls

நகரின் மையப்பகுதியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கடிகி நீர்வீழ்ச்சி. கோஸ்தானி நதியால் உருவாகும் இந்த நீர்வீழ்ச்சி சுற்றிலும் பசுமையான செடிகள் மற்றும் மரங்களால்  சூழப்பட்டுள்ளது. நடைபயணம் மற்றும் மலையேற்றம் போன்ற அற்புதமான சாகசங்களுக்கு இயற்கை ஆர்வலர்களின் மிகச்சிறந்த  பிரபலமான ஈர்ப்பாகும்.

3. கைலாசகிரி: kailasagiri hills

kailasagiri hills
kailasagiri hills

கைலாசகிரி என்பது மலை உச்சியில் அமைந்துள்ள ஒரு  பூங்கா நகரமாகும். மலையின் உச்சியில் அமைந்துள்ள இப்பகுதியானது சுற்றுலா செல்லாக்கூடிய பார்வையாளர் களுக்கு காடுகள் மற்றும் கடற்கரைகளின் பரந்த காட்சிகளை வழங்குகிறது. மேலும் இங்கு பிரமாண்டமான சிவன் மற்றும் பார்வதியின் சிலைகள் அமைந்துள்ளன, இவை பக்தர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருந்துவருகிறது.

4. போரா குகைகள்: bora cave

bora cave
bora cave

போரா குகைகள் அரக்கு பள்ளத்தாக்கின் அனந்தகிரி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய குகைகளுள் ஒன்றாக இந்த போரா குகைகள் கூறப்பட்டுவருகின்றன. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த குகையானது முழுக்க முழுக்க கர்ஸ்டிக் சுண்ணாம்புக் கல்லால் உருவாகியுள்ளது. மேலும்  அவை பசுமையான காடுகளால் சூழப்பட்டு சுற்றுலாவிற்காக வரக்கூடிய மக்களுக்கு  அழகான காட்சிகளை வழங்குகின்றன.

5. இந்திரா காந்தி விலங்கியல் பூங்கா: Indira Gandhi Zoological Park

Indira Gandhi Zoological Park
Indira Gandhi Zoological Park

1977 இல் நிறுவப்பட்ட இந்த மிருகக்காட்சிதிடலில்  சுமார் 100 வகையான பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன. அதோடு இப்பகுதியானது பரந்த ஏக்கர் பரப்பளவில் ‘கம்பலகொண்டா’ காடுகளின் இயற்கையான பசுமைமிக்க சூழலால் அமைந்துள்ளது. மேலும் இது வனவிலங்கு பிரியர்களுக்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக அமைகிறது.

6. விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம்: Fishing Harbour

Fishing Harbour
Fishing Harbour

ந்த மீன்பிடித் துறைமுகம் ஆந்திரப் பிரதேசத்தின் மிகப் பழமையான துறைமுக நகரங்களில் ஒன்றாகும். அதனுடைய அமைதியான நிலப்பரப்புகளுக்கும்,  காற்றோட்டமான கடற்கரை பகுதிகளுக்கும், வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு புகழ் பெற்ற இடமாகும்.

7. மத்ஸ்ய தர்ஷினி: matsya darshini

matsya darshini
matsya darshini

ராமகிருஷ்ணா கடற்கரையில் அமைந்துள்ள இந்த அக்வாரியமில் பல வகையான மீன்கள் உள்ளன. அதோடு இங்கு குழந்தைகளுக்கான க்ளோன் மீன், கொம்பு மாட்டு மீன் மற்றும் அணில் மீன் போன்ற பலவகையான மீன்களை இங்கு அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள்.

8. அரக்கு பள்ளத்தாக்கு: Araku Valley

 Araku Valley
Araku Valley

கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த அரக்கு பள்ளத்தாக்கு அதனுடைய இயற்கை அழகு, காபி தோட்டங்கள் மற்றும் பழங்குடி கலாச்சாரத்திற்கு புகழ் பெற்ற ஒரு பகுதியாகும். மேலும் இது ஒரு சுற்றுலாத் தளமாகவும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகவும் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com