கேரளாவில் இருக்கும் பீட்ச்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். கேரளா சுற்றுலா செல்பவர்கள் கட்டாயம் இந்த இடங்களை மிஸ் செய்து விடாதீர்கள். கடவுளின் தேசமாக அறியப்படும் கேரளாவில் இருக்கும் கடற்கரைகள் பற்றியும், அதன் சிறம்பசங்கள் பற்றியும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
முனாம்பம்:
கொச்சியில் இருக்கும் முனாம்பம் பீச் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடம். இங்கு இருக்கும் பழமையான மீன்பிடி துறைமுகத்தை சுற்றி பார்க்கலாம். இந்த ஸ்பாட்டில் பல வாட்டட் ரைட்களும் உள்ளன.
வர்கலா பீச்:
திருவனந்தபுரத்தில் இருக்கும் இந்த பீச் பாபநாசம் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. மாலை நேரத்தில் இங்கு சூரியன் மறையும் அழகு மக்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது. கடலுக்கு அருகாமையில் மலைகளும் அமைந்துள்ளன.
ஆலப்புழா:
அறிமுகவே தேவையில்லாத இடம் கேரளா சுற்றுலாவில் முதலிடத்தில் இருக்கும் இடம் ஆழப்புழா. இங்கு இருக்கும் கலங்கரை விளக்கம், வீட்டை ஒட்டி ஓடும் ஆறுகள் என ஆலப்புழா பீச் குட்டி தீவு போல இருக்கும்.
கோவளம் :
கேரளாவில் மிகவும் முக்கியமான பீச் ஸ்பாட். இங்கு சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் பல விஷயங்கள் உள்ளன. சன் பாத், கட்டு மர பயணம், வாட்டர் சவாரி என குடும்பத்துடன் என் ஜாய் செய்யலாம்.
முழப்பிலங்காடு:
இது ஒரு டிரைவ் இன் பீச் ஆகும். கண்ணூரில் அமைந்திருக்கும் இந்த பீச்சை ரசிக்க இங்கு விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். 4 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த பீச்சை கட்டாயம் மிஸ் செய்து விடாதீர்கள்.