ஷாட் அண்ட் ஸ்வீட்டா ஒரு சுற்றுலா போக ஐடியா உள்ளதா... அப்போ இந்த இடங்கள் உங்களுக்குத்தான்!

ஷாட் அண்ட் ஸ்வீட்டா ஒரு சுற்றுலா போகலாமா? அதுவும் தமிழ்நாட்டிலேயே மனநிறைவும் புத்துணர்ச்சியும் அளிக்க கூடிய சில இடங்களுக்கு. இதில் நமக்கு எது வசதியான இடமோ அதை தேர்ந்தெடுத்து நான்கு நாட்கள் தங்கி நம் எனர்ஜி லெவலை ஏற்றிக் கொண்டு வரலாமே! 
Famous Tourist and important tourist places in Tamilnadu
Famous Tourist and important tourist places in Tamilnadulh3.googleusercontent.com

1. ஏலகிரி:

 ஜவ்வாது மலைகள்
ஜவ்வாது மலைகள்

வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டைக்கு இடையில் அமைந்துள்ளது ஏலகிரி. இது கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது ஒரு சிறந்த மலைவாசத்தலமாகும் . இங்கு புங்கனூர் ஏரி,  ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, ஏலகிரி முருகன் கோவில், நிலவூர் ஏரி ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள். நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழல் நிறைந்த இடம்.

2. ஏற்காடு:

கிளியூர் அருவி
கிளியூர் அருவிlh3.googleusercontent.com

து தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலை வாசஸ்தலம் ஆகும்.ஏழைகளின் ஊட்டியென அழைக்கப்படும் ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்து மகிழலாம். ஏற்காடு ஏரியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சேர்வராயன் மலை தொடரில் உள்ள கிளியூர் அருவியும் பார்க்க வேண்டிய இடமாகும். மற்றும் ஒரு பார்க்க வேண்டிய இடம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்.

இந்த அம்மன் 4.5 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அமைந்துள்ள அழகான சிலையாகும். மான் பூங்கா , 32 கிலோமீட்டர் நீளம் உள்ள லூப் ரோடு ஆகியவையும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

3. வால்பாறை:

வால்பாறை
வால்பாறை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வால்பாறை மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது.வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளும், பனி மூடிய மலைகளும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் தேயிலைத் தோட்டங்களும் , இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களையும் வனப் பகுதிகளையும் கொண்டுள்ளது வால்பாறை.ஆங்காங்கே காணப்படும் நீரூற்றுகளும், அருவிகளும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றது.

4. முதுமலை:

தெப்பக்காடு யானைகள் முகாம்
தெப்பக்காடு யானைகள் முகாம்lh3.googleusercontent.com

 மிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலையில் பார்க்க வேண்டிய இடங்கள் தெப்பக்காடு யானைகள் முகாம், பந்திப்பூர் புலிகள் காப்பகம் , முதுமலை தேசிய பூங்கா. இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5. சிதம்பரம்:

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு
பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுlh3.googleusercontent.com

டலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மட்டும் சிறப்பு பெற்றது அல்ல பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு, பொன்னியின் செல்வன் கதையோடு தொடர்புடைய கொள்ளிடம், வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் நகரத்தையும் கண்டு களித்து வரலாம்.

பிச்சாவரம்: சிதம்பரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியை சுற்றிப் பார்க்க படகு வசதி உள்ளது. 45 நிமிடங்கள் வனத்தை சுற்றி வரும் துடுப்பு படகில் ஆனந்தமாக பயணிக்கலாம். காட்டின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க கரையில் கண்காணிப்பு கோபுரம், நவீன மைக்ரோஸ்கோப் வைக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com