மசினகுடியில் நீங்கள் கட்டாயம் சுற்றிப் பார்க்க வேண்டிய 5 இடங்கள்!

Masinagudi tourist places.
Masinagudi tourist places.

மசினகுடி தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. இது வனப்பகுதியால் சூழப்பட்டிருப்பதால் இயற்கை பகுதிகளுக்கு பஞ்சமே இருக்காது. நகர வாழ்க்கையிலிருந்து தப்பிக்க இயற்கையின் வாழ்விடமான மசினகுடிக்கு வார இறுதி நாட்களில் செல்லலாம்.

அந்தவகையில் மசினகுடியில் நாம் சுற்றிப் பார்க்க வேண்டிய ஐந்து இடங்கள்:

1. முதுமலை தேசிய பூங்கா:

Mudhumalai national park
Mudhumalai national parkImge credit: Tourist places & Travel guide in tamil - Native

பல வகை உயிரினங்களைப் பாதுகாக்கும் விதமாக அமைக்கப்பட்ட இந்த முதுமலை தேசிய பூங்கா  மசினிகுடியிலேயே மிகவும் பிரபலமானது. இங்கு வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சஃபாரி மூலம் பல வகையான தாவரங்களையும், விலங்குகளையும் பார்க்கலாம். ஆம்! ஆசிய யானைகள், இந்திய ஹெரான்கள், சிறுத்தைகள், இந்திய ராட்சஸ அணில்கள், வங்காளப் புலிகள், சோம்பல் கரடிகள் எனப் பல உரினங்கள் இங்கு உள்ளன.

இங்கு காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மதியம் 3 மணி முதல் 6 மணி வரை சுற்றிப் பார்க்கலாம். நுழைவுக் கட்டணம் 30 ரூபாய், சஃபாரி செய்தால் அதற்கு 4200 ரூபாய் கட்டணமாகக் கொடுக்க வேண்டும்.

2. விபூதி மலை முருகன் கோவில்:

விபூதி மலை முருகன் கோவில்
விபூதி மலை முருகன் கோவில்Imge credit: Flyopedia Canada

இந்த கோவில் நீலகிரி மலையின் சோலூர் மலைத்தொடரில் உள்ள விபூதி மலையில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி அந்த இடத்தில் உள்ள உள்ளூர் மக்கள் வழிப்படுவதற்காக இக்கோவிலைக் கட்டினார். இக்கோவிலுக்கு மலை ஏறி செல்லலாம் அல்லது ஜீப் சவாரி மூலம் செல்லலாம். இங்கிருந்து நீலகிரி மலையின் அழகிய விசாலமான காட்சிகளைக் காணலாம்.

3. தெப்பக்காடு யானைகள் முகாம்:

தெப்பக்காடு யானைகள் முகாம்
தெப்பக்காடு யானைகள் முகாம்Imge credit: Tamil news - Asianet news

இந்த முகாம் 1972ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு பல யானைகளுக்கு உணவளித்து பாதுகாத்து வருகின்றனர். அதேபோல் யானைகளுக்கு பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இங்குள்ள யானைகள் ரோந்து பணி செய்வது, விநாயக பெருமானுக்கு பூஜை செய்வது, சுற்றுலா பயணிகளுக்கு சவாரி செய்வது போன்ற பல வேலைகளை செய்து வருகின்றன. இந்த இடத்திற்கு காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செல்லலாம். நுழைவுக்கட்டணம் ரூ.30 ஆகும்.

4. மோயார் ஆறு:

மோயார் ஆறு
மோயார் ஆறுImge credit: Make my trip

முதுமலை தேசிய பூங்காவிற்கும் பந்திப்பூர் தேசிய பூங்காவிற்கும் இடையில் உள்ள ஆறுத்தான் மோயார் ஆறு. இது பல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நீர் ஆதாரமாக இருக்கிறது. மேலும் பார்வையாளர்களுக்கு இங்கு படகு சவாரி செய்யவும் அனுமதி உண்டு.

5. பந்திப்பூர் தேசிய பூங்கா:

பந்திப்பூர் தேசிய பூங்கா
பந்திப்பூர் தேசிய பூங்காImge credit: Karnataka Tourism

874 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகம் 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு புலிகள் மட்டுமல்ல யானைகள், மான்கள், மயில்கள், கரடிகள் போன்ற விலங்குகளும் உள்ளன. இங்கு செல்ல அனுமதி பெற்றால் மட்டுமே முகாமிற்குள் செல்ல முடியும். இங்கு காலை 6.30 மணியிலிருந்து 10.30 வரை செல்லலாம். அதேபோல் மதியம் 2.30 மணியிலிருந்து 6.30 மணி வரை செல்லலாம். இந்த பகுதியில் சஃபாரி வாகனத்தில் சுற்றிப் பார்க்க 3500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com