உலக நாடுகளில் மிகவும் அழகான நில அமைப்பைப் பெற்றுள்ள சில நாடுகள் உள்ளன. உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் முன்னிலையில் நியூசிலாந்து உள்ளது. இங்கு, பனிப்பாறைகள், தீவுகள், கடற்கறைகள், பசுமையான காடுகள், நீண்ட புல்வெளிகள் என அழகுமிகுந்த நிலப்பரப்பை கொண்டுள்ளது.
மூங்கில் காடுகள், ஃபூஜி மலை, அழகிய கடற்கரைகள் என ஜப்பானும் டாப்பில் உள்ளது. வசந்த காலத்தில் தேர்ந்தெடுக்கும் இடமாக இந்த நாடு திகழ்ந்து வருகிறது. எந்த நாட்டில் வாழ்பவரும் விரும்பக்கூடிய ஒன்றாக சுவிச்சர்லாந்து உள்ளது. ஹனிமூன் ஸ்பாட்டாக மட்டுமே அறியப்பட்டுள்ளது. ஆனால் அதனை தாண்டி அழகிய ஏரிகள், எளிமையான கிராமங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் என கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
அனைவரது பக்கெட் லிஸ்டிலும் இத்தாலி இருக்கும். கடற்கரைகளுக்கென தனிச்சிறப்பு வாய்ந்தவை. பாரம்பரிய தலங்களும் அமைந்துள்ளன. வைரம் போல பளபளப்பான தண்ணீரும், பால் போல வெண்மையான மணலும் புகைப்படங்களில் பார்க்கும் போதே மாலத்தீவு என கூறிவிடலாம். அந்த அளவுக்கு அழகிய நிலப்பரப்பை கொண்ட இடங்களாக அமைந்துள்ளது. பாரிஸ் நகரின் அழகை மட்டுமே திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் பிரான்ஸ் மிகவும் அதியற்புதமான சுற்றுலாத்தலங்களைக் கொண்ட நாடு. இங்கே போனால் நிச்சயம் குடும்பத்துடன் குதூகலித்து விட்டு திரும்பி வரலாம். இது ஒரு அற்புதமான அனுபவமாகவும் இருக்கும்.