பிக்னிக் செல்வது ஒரு சுகமான அனுபவம்!

ஜூன் 18 சர்வதேச சுற்றுலா தினம்!
International Picnic Day...
International Picnic Day...
Published on

ர்வதேச பிக்னிக் தினம் ஜூன் மாதம் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிக்னிக் என்ற சொல்லே நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தும். சின்ன வயதில் பள்ளியில் சுற்றுலா அழைத்துச் செல்லும்போது நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் சென்றது ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

பயணம் செய்வது என்பது சுற்றுலாவின் ஒரு பகுதி மட்டுமல்ல நாட்டின் பொருளாதரத்தின் ஒரு பகுதியும் ஆகும். ரொட்டின் நடைமுறையிலிருந்து மாறி மனதையும் உடலையும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும், நெருங்கியருடன் பயணம் செய்யவும், அன்புக்குரியவர் களுடன் பிக்னிக் செல்வது ஒரு சுகமான அனுபவம்தான்.

பிக்னிக் என்ற சொல் பிரெஞ்சு வார்த்தையான பிக் - நிக் என்பதிலிருந்து உருவானது. போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றது 2009 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சுற்றுலாவாக கின்னஸ் புத்தகத்தில் பதிவானது. மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் போக்கி மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியும் தரக்கூடிய ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம்.

சுற்றுலா என்பது வழக்கமான சூழ்நிலையிலிருந்து வெளியே பயணிப்பதும் தங்குவதுமாகும். சுற்றுலாவை ஓய்வு சுற்றுலா, வணிகச் சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, சாகச சுற்றுலா என பல்வேறு வகைகளாக வகைப் படுத்தலாம். இவை பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் வழி வகுக்கும்.

சுற்றுலாவின் தோற்றம் பண்டைய நாகரீகத்திலிருந்து அறியப்படுகிறது. எகிப்தியர்கள், ரோமானியர்கள் கிரேக்கர்கள் ஓய்வு மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்காக பயணம் செய்தனர். இடைக்காலத்தில் புனிதத் தலங்களுக்குச் செல்ல மத யாத்திரைகளும் சுற்றுலாவின் ஒரு வடிவமாக மாறியது.

டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணையமும் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது. பயணங்களை திட்டமிடுவதும், ஆன்லைன் முன்பதிவு மூலம் பயணங்களை எளிதாக்குவதும் முன் எப்போதையும் விட எளிதாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
பலாப்பழம் வைத்து சுவையான இரண்டு வகை ஸ்வீட்!
International Picnic Day...

சுற்றுலாவில் வகுப்பறை அமைப்பில் கிடைக்காத கற்றல் அனுபவத்தை பெறுவதற்காக மேற்கொள்ளப்படுவது கல்வி சுற்றுலா. புனித சுற்றுலா மத அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக செல்லப்படுவது ஆன்மீக சுற்றுலா. 

ஒரு நாட்டின் கலாச்சாரம், நாகரீகம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள செல்லும் பயணம் கலாச்சார சுற்றுலா எனப்படும். வனப்பகுதி மற்றும் இயற்கை சூழல்களை மையமாகக் கொண்ட பயணம் இயற்கை சுற்றுலாவாகும்.

சுற்றுலாவின் மூலம் மட்டுமே உலகம் சமூக கலாச்சார மற்றும் மதரீதியாக ஒருவரையொருவர் அறிந்துகொள்ள முடியும். பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்ல பிணைப்பை ஏற்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com