இயற்கையின் அற்புதமான குருசடை தீவுக்கு சென்று இருக்கிறீர்களா?

குருசடை தீவு ...
குருசடை தீவு ...

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் கடலில் கண் குளிரும் இயற்கை அழகுடன் அரிய வகை கடல் உயிரினங்களுடன் அமைந்துள்ளது குருசடை தீவு.

மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. இவற்றைச் சுற்றி பவளப்பாறை, டால்பின், கடல் பசு, உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. இதில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு. மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் குருசடை தீவு  மண்டபம் பகுதியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த கடற்பகுதியில் தனித்தன்மை கொண்ட அரிய வகை கடல் பாசிகள் அதிகம் காணப்படுகின்றன. குருசடை தீவு, புள்ளிவாசல் தீவு, சிங்கில் தீவு, பூமரிச்சான் தீவு, ஆகியவற்றிக்கு படகு மூலம் சென்று அரியவகை பவளப்பாறைகள் கடல் வாழ் உயிரினங்கள் மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு சுற்றுலாத் துறையினர் வனத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு படகு சவாரியின் மூலம் பாம்பன் குந்துக்கால்  வனத்துறை படகு இறங்கு தளத்திலிருந்து படகு சவாரி தொடங்கப்பட்டு குருசடை தீவிற்கு சென்று, அங்குள்ள ஒரு கிலோமீட்டர் தூரம் நடைபாதையில் பயணித்து குருசடை தீவிற்க்கு சென்று குரு சடைதீவில் காணப்படும்  அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் தாவரங்கள் பறவைகள் ஆகியவற்றை கண்டு மகிழலாம்.

பவளப்பாறைகள்...
பவளப்பாறைகள்...

குருசடை தீவிற்கான படகு சவாரி தினம்தோறும் காலை 7 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை இயக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காக லைப் ஜாக்கெட்டும் பயிற்சி பெற்ற லைப் கார்டு ஒருவரும் பணியமர்த்தப் பட்டுள்ளார். குருசடைதீவு வெளியிட ஜீவராசிகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கும் தீவாகும். இந்த தீவு தனித்தன்மையான பவளப் பாறைகளுக்கு புகழ்பெற்ற இடம் ஆகும். இந்த தீவில் கடற்பஞ்சுகள் காணப்படுகின்றன. இந்த கடற்பஞ்சு உயிரினத்துக்கு அருகில் வேற ஏதாவது உயிரினம் வந்தாலோ அல்லது யாராவது இதற்கு ஆபத்து விளைவிக்க நினைத்தாலோ அமீபா போன்று உருமாறும் தன்மை கொண்டது.

குருசடை தீவு ...
குருசடை தீவு ...

சுற்றுலா பயணிகள் மணல் திட்டில் கரை ஒதுங்கி உள்ள பவளப்பாறைகளை கண்டு ரசிப்பதுடன் கடலில் இறங்கி மகிழ்கின்றனர்.  பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிக்கொண்டு படகுக்கு அடியில் பொருத்தப் பட்டுள்ள கண்ணாடிகள் மூலம் அந்த மணல் திட்டை சுற்றிலும் வாழ்ந்து வரும் கடல் வாழ் உயிரினங்களை வனத்துறையினர் சுற்றிக் காட்டுகின்றனர். அவசியம் சென்று பாருங்கள். அருமையான பயணமாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com