கர்நாடகா உடுப்பியில் உள்ள செயின்ட் மேரிஸ் தீவுக்கு சென்று இருக்கிறீர்களா

செயின்ட் மேரிஸ் தீவு
செயின்ட் மேரிஸ் தீவு

ர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் உள்ள செயின்ட் மேரிஸ் தீவு பிரமிக்க வைக்கும் இயற்கை அழகுடன் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. வெள்ளை மணல் திட்டுகள் உயரமான பனை மரங்கள் பாறைகளில் மோதும் வெள்ளை நுரை அலைகள் அழகிய பாதைகள் இவையாவும் சேர்ந்து செயின்ட் மேரிஸ் தீவின் அம்சங்கள் ஆகும்.

இங்கே இருப்பது நாம் ஏதோ வெளிநாட்டில் உள்ள தீவுகளில் ஏதோ ஒன்றில் உள்ளது போன்ற உணர்வைத் தரும். உடுப்பியில் உள்ள செயின் மேரி தீர்வு கர்நாடகாவின் மால்பே கடற்கரையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அரபிக் கடலில் அமைந்துள்ளது.

இந்த அழகான தீவு சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மக்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த இடத்தில்தான் முதன் முதலாக வாஸ்கோடகாமா கால் பதித்தார் என்று கூறப்படுகிறது. இங்கே உள்ள படிக பாறைகளில் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது தீவில் மிகவும் கவர்ச்சிகரமான அனுபவங்களில் ஒன்றாகும்.

செயின்ட் மேரிஸ் தீவில் உள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தேங்காய் தீவு, வடக்குத்தீவு, தெற்கு தீவு, மற்றும் தர்பா பகதுர்கர் தீவு,  என்ற நான்கு தீவுகளின் குழுவாக செயின்ட் மேரிஸ்  தீவு உள்ளது. அறிவியல் பதிவுகளின்படி மடகாஸ்கரின் துணை எரிமலை செயல்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்டது. இரண்டு இடங்களிலும் உள்ள பாறை அமைப்புகளும் பொருந்துகின்றன. சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் துணை எரிமலை செயல்பாட்டின் காரணமாக அது பிரிக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

தீவிலுள்ள நெடு வரிசை எரிமலை அல்லது பாசால்டிக் பாறைவடிவங்கள் ஒரு பிரபலமான ஈர்ப்பு மற்றும் மிகவும் தனித்துவமானது. செயின்ட் மேரிஸ் தீவு தேங்காய் தீவு என்றும் குறிப்பிடப்படுகிறது.

செயின்ட் மேரிஸ் தீவு
செயின்ட் மேரிஸ் தீவு

இந்த தீவில் பனானா ரைடு போன்ற தண்ணீர் விளையாட்டு ஏற்பாடு செய்து வைத்துள்ளனர். இந்த தீவின் தனித்துவமான நிலப்பரப்பு பீச் டிரெக்கிங் வாய்ப்பும்அளிக்கிறது.

கடற்கரையில் இருந்து தீவுக்கு செல்வதற்கான ஒரே வழி ஒரு படகு சவாரிதான். படகில் தீவுக்கு செல்லும்போது வழியில் கடல் பாசிகள் பிராமினி காத்தாடிகள் மற்றும் டால்பின்கள் பார்க்க முடியும். இந்த தீவின் அழகு குளிர்கால சூரியனின் கீழ் இனிமையான வெப்ப நிலையில் தான் இதமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
விடா முயற்சி நிச்சயம் வெற்றியைத் தரும்!
செயின்ட் மேரிஸ் தீவு

மால்பே கடற்கரையில் இருந்து 1.5 கிலோமீட்டர் ஓரத்தில் தர்பாபஹ துர்க்கர் கோட்டையும் இன்னொரு  மீட்டரில் வடபண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இவை மிகவும் பாப்புலரான சுற்றுலா தலங்கள் ஆகும். இது தவிர மால்பே கடற்கரையிலும் தரமான நேரத்தை செலவிடலாம்.

இந்த தீவு மால்பேவிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மங்களூர் விமான நிலையத்தை பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com