

தெலுங்கானாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னமான இது 1591 இல் குலி குதுப்தாவால் கட்டப்பட்டது. இதன் பொருள் நான்கு கோபுரங்கள் என்பதை குறிக்கும்.
இந்தக் கட்டடம் இந்து இஸ்லாமிய கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது நான்கு பிரம்மாண்ட வளைவுகள் மற்றும் நான்கு மினாரெட்டுகளைக் கொண்டது. அதன் மேல் பகுதியில் ஒரு பெரிய மசூதி உள்ளது மேலும் நகரத்தின் அடையாளமாகவும் சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது.
கிரானைட் பளிங்குகள் மற்றும் சுண்ணாம்பு கலவையால் ஆனது. பாரசீகம் மற்றும் இந்து கட்டிடக்கலை அமைப்பில் உள்ளது. ஹைதராபாத்தில் பரவி இருந்த பிளேக் நோய் முடிவுக்கு வந்ததை அடுத்து அதைக் குறிக்கும் வகையில் மற்றும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த சார்மினார் கட்டப்பட்டது. இதன் ஒவ்வொரு மூலையிலும் 48 மீட்டர் உயரமுள்ள நான்கு மினார்கள் உள்ளன அவை நான்கு கல்பாக்களை குறிக்கிறது.
இதன் மேல் தளத்தில் மசூதி உள்ளது இதன் கீழ் பகுதியில் வகுப்பறைகள் உள்ளன. மினாரின் உயரம் 160 அடி இதன் அருகில் சூடி பஜார் உள்ளது மிகவும் பரபரப்பான பகுதியாக காணப்படுகிறது. இந்த இடங்களில் சார்மினார் பிரியாணி மிகவும் பிரபலம். சைவ பிரியாணி அசைவப் பிரியாணி இரண்டும் தரமாக கிடைக்கிறது. இந்த ஏரியா முழுவதும் நகை கடைகள் சந்தை பகுதி நிறைந்துள்ளது
சார்மினார் முசி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. இதன் நான்கு பக்கமும் 20 மீட்டர் நீளம் கொண்டது. ஒவ்வொரு மினாரும் 56 மீட்டர் உயரம் உள்ளது. ஒவ்வொரு மினாரிலும் இரட்டை பால்கனி உள்ளது. இதன் மீது ஏறி இறங்க 149 படிகள் உள்ளது. இதன் மேற்பகுதியில் இருந்து ஹைதராபாத் நகரத்தை முழுமையாக சுற்றிப் பார்க்கலாம்.
ஹைதராபாத் மெட்ரோவில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் நாம் பள்ளி ரயில் நிலையத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில உள்ளது.
Hyderabad tourist places:
ஹைதராபாத் சார்மினார் பிரியாணி
இங்கு ஏராளமான உணவகங்கள் உள்ளன. இங்கு உள்ள பிரியாணி சுவையாகவும் தரமாகவும் உள்ளது. இங்குள்ள கடைகளில் கிலோ கணக்கில் ஆர்டர் செய்து வாங்கலாம் பிரியாணியில் கபாகள் கோத்தாக்கள் அல்லது பணக்காரர்களின் கறிஉடன் இணைத்து பேசப்படுகிறது.
லாட் பஜார்
இதனை சூடி பஜார் என்றும் அழைக்கிறார்கள். இந்த சந்தை மிகவும் பழமையானது. இங்கு லாக் வளையல்கள் அதிகம் காணப்படும். லாக் வளையல்கள் அதிகம் செய்யப்படும் பட்டறைகள் அதிகமாக உள்ளன. கைவினைப் பொருட்கள் நகைகள் திருமண பொருட்கள் துப்பட்டாக்கள் கலம் காரி ஓவியங்கள் வெள்ளி பொருட்கள் மிககுறைந்த விலையில் கிடைக்கும்.
மக்கா மஸ்ஜித்
1614 இல் தொடங்கி 1693 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மிகவும் பழமையான மசூதி ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் தங்கக்கூடிய பெரிய மசூதி ஆகும் முஹம்மது குதுப்க்ஷாவால் கட்டப்பட்டது. கூலி வம்சத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்கு நிஜம்களின் கல்லறைகள் உள்ளன. முஸ்லிம் அல்லாதவர்கள் இந்த மசூதிக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை.
சௌ மொகல்லா அரண்மனை
1857 மற்றும் 1869 ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை ஆகும். அக்காலத்தில் நிஜாம்களின் வசிப்பிடமாக இருந்து வந்தது. இரண்டு பெரிய முற்றங்கள் பெரிய உணவுக்கூடம் பசுமை தோட்டங்கள் நீரூற்றுகள் ஏராளமாக உள்ளன. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தற்போது நிஜாம் வாரிசின் பர்கத் அலி ஜாவின் வசம் உள்ள சொத்தாக கருதப்படுகிறது.
சாலர் ஜங் மியூசியம்
நாட்டிலுள்ள மூன்று தேசிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மியூசி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் இரண்டு தளங்களுடன் 38 காட்சி அகங்கள் உள்ளன. இங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஓவியங்கள் கலைப் பொருட்கள் சிற்பங்கள் கையெழுத்து பிரதிகள் உள்ளன. 19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இசை கடிகாரம் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.
நேரு விலங்கியல் பூங்கா
இந்தப் பூங்காவில் 1500 க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் ஊர்வன பறவைகள் அதிகம் உள்ளன. ஹைதராபாத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். 380 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்குள்ள விலங்குகள் இயற்கையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பூங்காவில் யானை சவாரி மற்றும் சபாரி மூலம் சுற்றிப் பார்க்கலாம். டைனோசர் பூங்கா அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே மினி ரயிலில் சுற்றி பார்க்கும் வசதி உள்ளது. ஆப்பிரிக்க சிங்கங்கள் புலிகள் சிறுத்தைகள் ஓநாய்கள் குள்ளநரி முதலைகள் ராட்சத பல்லிகள் பாம்பு வகைகள் பறவை இனங்கள் என ஏராளமாக உள்ளது.