இந்திய ரயில்வே ஸ்டேஷன்கள் பின்னணியில் இவ்வளவு சுவாரஸ்யங்களா..!

payanam articles
Indian railway stations
Published on

ந்திய போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ரயில்வே துறை உலகிலேயே மிகப்பெரிய கட்டமைப்பு கொண்டது. இந்திய ரயில்வேயின் கீழ் ஏறத்தாள 300 ஜங்ஷன்களும், ஏறத்தாள 7112 ரயில்வே ஸ்டேஷன்களும் உள்ளன. ஒரு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மூன்று பாதைகள் அதாவது மார்க்கங்கள் சென்றால் அதை ஜங்ஷன் என்கிறார்கள்.

பொதுவாக 23 ரயில்வே ஸ்டேஷன்கள் ஒரு ஜங்ஷனின் கட்டுப்பாட்டில் வருகிறது. ஒரு ஜங்ஷனுக்கும் இன்னொரு ஜங்ஷனுக்கும் இடையே 100 முதல் 130 கிமீ தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.  இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே ஜங்ஷன் மதுரா ஜங்ஷன் தான். இங்கிருந்து 6 மார்க்கங்கள் வழியாக ரயில்கள் செல்கின்றன. அதில் 6 பிராட்கேஜ், 1 மீட்டர் கேஜ் பாதைகள் உள்ளது.

ஒரு ரயில்வே ஸ்டேஷன் என்றால் அங்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 40 டிக்கெட்களாவது விற்கவேண்டும் என்பது விதி. அங்கு ரயில் நின்று செல்லும் நிலையில்தான் இது பொருந்தும். ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கும், மற்றொரு ரயில்வே ஸ்டேஷனுக்கும் குறைந்த பட்சம் 6 முதல் 8 கிமீ தூரம் இடைவெளி இருக்கவேண்டும்.

இந்தியாவில் குறைந்த இடைவெளியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் நாக்பூர்- அஜ்னி இடையிலான தூரம்தான். வெறும் 2.8 கிமீ இடையில் இந்த இரு ரயில் நிலையங்களும் அமைந்துள்ளன. இந்திய ரயில்வே ஸ்டேஷன்களை A1  முதல் F வரை தரம் பிரித்துள்ளனர். இதில் A1, A மற்றும்B பிரிவு வரை மிகவும் முக்கியமான ஸ்டேஷன்கள் வருகிறது. இந்த பிரிவில் 407 ஸ்டேஷன்கள் வருகிறது.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் யுனெஸ்கோ அமைப்பில் உலகின் புராதானச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 33 மில்லியன் பயணிகளை இந்த ரயில் நிலையம் கையாள்கிறது. இந்தியாவில் அதிக வருமானம் தரும் ரயில்வே ஸ்டேஷனும் இதுதான். இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது மும்பை தாதர் ரயில்வே ஸ்டேஷன்.

இதையும் படியுங்கள்:
தென்மலை: இயற்கையின் சொர்க்கம்!
payanam articles

இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான ரயில்வே ஸ்டேஷன் என்ற பெருமையை பெற்ற ரயில்வே ஸ்டேஷன் அகமதாபாத்திலுள்ள சூரத் ரயில் நிலையம்தான். சென்னையிலிருந்து அகமதாபாத் செல்லும் நவ ஜீவன் எக்ஸ்பிரஸ் இந்த சூரத் ஸ்டேஷன் வழியாக செல்கிறது.

ரயில்வே டெர்மினஸ் அல்லது டெர்மினல் என்றால் அந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் ரயில்கள் ஒரே வழியாக வந்து ஒரே வழியாக செல்கிறது என்று அர்த்தம். அதாவது அதுவே கடைசி ஸ்டேஷனாக இருக்கும் உதாரணமாக மும்பை சத்திரபதி சிவாஜி டெர்மினல்.

பல ரயில்கள் வந்து செல்லும் மாநிலத்தின் தலைநகரான ரயில்வே ஸ்டேஷன்களை சென்ட்ரல் ரயில் ஸ்டேஷன் என்கிறார்கள். உதாரணமாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். இந்தியாவில் மொத்தம் 5 சென்ட்ரல் நிலையங்கள் உள்ளன அவை சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கான்பூர், மங்களூரு ரயில் நிலையங்கள்.

இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் உயரமான இடத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷன் மேற்கு வங்கத்தில் உள்ள "கூம்" ரயில்வே ஸ்டேஷன். இது கடல் மட்டத்திலிருந்து 2258 மீ உயரத்தில் அமைந்துள்ளது. சிலிகுரியிலிருந்து டார்ஜிலிங் செல்லும் ரயில்கள் இதன் வழியாக செல்கிறது யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன பட்டியலில் உள்ளது.

நாட்டின் வட கோடி ரயில் நிலையமாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லாவும், மேற்கு பகுதியின் கடைகோடி ரயில் நிலையமாக குஜராத் மாநிலம் புத் அருகிலுள்ள நலியாவும், கிழக்கில் லெடோ ரயில் நிலையமும், தெற்கில் கன்னியாகுமரியும் கடைகோடி ரயில் நிலையங்களாக அமைந்து இருக்கின்றன.

ஒரே இடத்தில் அமையப்பெற்ற இரண்டு ரயில் நிலையங்களாக மஹாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் உள்ள பெலாபூர் மற்றும் ஸ்ரீராம்பூர் ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ரயில் வழித்தடத்தின் இரு மருங்கிலும், இரண்டு ரயில் நிலையங்களும் எதிரெதிரே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேச தலைநகர் லக்னோதான் இந்தியாவின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையம். இங்கு நாள்தோறும் 64 ரயில்கள் கடந்து செல்கின்றன. அகலப்பாதை, மீட்டர் கேஜ் பாதை, நேரோகேஜ் பாதை என மூன்று வகை ரயில் தடங்களையும் கொண்டது.

இதையும் படியுங்கள்:
ஆக்ராவின் அழகை நோக்கி ஒரு பயணம்!
payanam articles

உலகின் மிக நீளமான ரயில்வே நடைமேடை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள இரயில் நிலையத்தில்  உள்ளது. சுமார் 1500 மீட்டர் நீளம் 10 மீட்டர் அகலம் பரப்பளவு கொண்டது. இதற்கு முன் உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் ரயில் நிலையம்தான். நீண்ட நடைமேடை கொண்ட ரயில் நிலையம்.

ரயில்வே சார்பில் ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயர் இல்லாமலேயே ஒரு ரயில் நிலையம் இத்தனை காலமாகச் செயல்பட்டு வருகிறது. பெயரின்றி இயங்கும் இந்த ரயில் நிலையம் ஒடிசா மாநிலத்தில் ரெய்னா மற்றும் ராய்நகர் கிராமங்களுக்கு இடையே பங்குரா-மாசகிராம் ரயில் பாதையில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com