ஜம்மு-காஷ்மீர் போறீங்களா? இந்த 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

ஜம்மு -காஷ்மீர்...
ஜம்மு -காஷ்மீர்...

னதை மயக்கும் அற்புதமான இயற்கைக் காட்சிகளின் சொர்க்க பூமியான ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் வடக்கில் அமைந்து  பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சர்வதேச எல்லைகளையும்  பகிர்ந்து கொள்கிறது. சற்றே அரசியல் மற்றும் வரலாற்று சிக்கல் நிறைந்த இடம் என்றாலும் அவற்றை மறந்து நம்மை லயிக்க வைக்கும்  "இந்தியாவின் கிரீடம்" ஆகிறது ஜம்மு காஷ்மீர். இது ஒரு வளமான மற்றும் பன்முக கலாச்சாரம்  கொண்ட வட இந்திய யூனியன் பிரதேசமாகும். பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் அமைதியான ஏரிகள் முதல் மலைப்பாங்கான மலைகள் மற்றும் உயரமான பாலைவனப் பகுதிகள் போன்ற  காட்சிகளுடன் கூடிய அதன் இயற்கை அழகு நம்மை முச்சடைக்க வைக்கும்.

அல்பைன் புல்வெளிகள், படிகம் போன்ற  தெளிவான ஏரிகள், இலையுதிர் காலத்தில் மரங்களின் அம்பர் சாயல்கள், படகு இல்லங்கள், கோண்டோலாக்கள், ஆப்பிள் பழத்தோட்டங்கள் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் உணவு வகைகளும் நம்மை ரசிக்க வைக்கும். இங்கு உள்ள ஏராளமான சுற்றுலாத் தளங்களில் நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத புகழ்பெற்ற 5 இடங்கள் பற்றிய விபரங்கள் இங்கு.

1. குல்மார்க் (gulmarg)

gulmarg
gulmarg

காஷ்மீரில் உள்ள "பூக்களின் புல்வெளிகள்" என்று அழைக்கப்படும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும் குல்மார்க் ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உயரமான கேபிள் கார் சவாரிக்கு பிரபலமானது. இந்த கேபிள் கார் மூலம் அபர்வத் மலையின் உச்சிக்கு செல்வது பார்வையாளர்களை புல்லரிக்கச் செய்கிறது. இந்திய நகரங்களில் குல்மார்க் சிறந்த பனிச்சறுக்கு சரிவுகளைக் கொண்டுள்ளது எனவே இது குளிர் கால விளையாட்டு களுக்கான பிரபலமான இடமாகும். ஜம்மு, காஷ்மீரின் சுற்றுலாத் தலங்களில் முதன்மையான இடத்தில் உள்ள குல்மார்க்கில் கோங்தூரி, ஸ்ட்ராபெர்ரி பள்ளத்தாக்கு, கிலன்மார்க், போடாபத்ரி, மகாராஜா அரண்மனை, மகாராணி கோவில், செயின்ட் மேரி தேவாலயம் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள்.

2. சோனா மார்க் (sonamarg)

sonamarg
sonamarg

"தங்கத்தின் புல்வெளி" என்று அழைக்கப்படும் சோனா மார்க் ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகிறது.  தலைநகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் கந்தர் பால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிந்து நதியின் கரையில் பைன் மற்றும் ஃபிர் மரங்களின் காடுகளால்  சூழப்பட்டுள்ளது . இங்கு சுற்றுலாப் பிரியர்கள் மலையேற்றம், குதிரை சவாரி மற்றும் வெள்ளை நீர் கிராப்டிங் போன்றவற்றை அனுபவிக்கலாம். இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தாஜ்வாஸ் பணிப்பாறை குதுகலத்தை தருகிறது. மேலும் நிலக்ரட் ஆறு, பால்டால் பள்ளத்தாக்கு போன்றவற்றின்     பனிப்பாறைகள் , ஏரிகள் மற்றும் நீரோடைகளில் மகிழலாம். சோஜிலா பாஸ்,  பூஜ்ஜிய புள்ளி ஆகியவற்றையும் காணலாம்.

3. பஹல்காம் (pahalgam)

pahalgam
pahalgam

"மேய்ப்பர்களின் கிராமம்" என்று அழைக்கப்படும் பஹல்காம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆற்றின் கரைகளில் பைன் மற்றும் தேவதாரு மரங்கள் அழகான இயற்கை சூழலில் தருகிறது. பிரபலமான சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது இது. இங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரு பள்ளத்தாக்கு இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு அழகான அமைதியான இடமாகிறது. நகர வாழ்க்கையின் பரபரப்பான சூழல்களில் இருந்து வித்தியாசமான அனுபவத்தை தருகிறது இந்த அரு பள்ளத்தாக்கு. அமர்நாத் கோவில்  யாத்திரைகளில் ஒன்றாகிறது. சந்தன்வாரி இங்குள்ள மற்றொரு பிரபலமான இடமாகிறது. "மினி சுவிட்சர்லாந்து" என்று அழைக்கப்படும் அழகிய பைசான் பள்ளத்தாக்கு இமயமலை சிகரங்களின் அற்புதமான காட்சிகளுக்கு பெயர் பெற்ற இடம் . மேலும் பீடாப் பள்ளத்தாக்கு , தபியான் பள்ளத்தாக்கு, லிடர்வாட் பஹல்காம் போன்றவைகளையும் கண்டு ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஓ மணப்பெண்ணே! இதையெல்லாம் கவனி 6 மாதங்களுக்கு முன்னே!
ஜம்மு -காஷ்மீர்...

4. ஸ்ரீநகர் (Srinagar)

Srinagar
Srinagar

ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள  ஸ்ரீநகர் ஜம்மு - காஷ்மீரின்  அழகான கோடைகால தலைநகரமாகும்.  தால் ஏரி மற்றும் சுற்றியுள்ள ஜபர்வான் மலைத்தொடர் உள்ளிட்ட இயற்கை அழகுக்காக பிரசித்தி பெற்றது.  காஷ்மீரின் மிகப்பெரிய முகலாயதா தோட்டமான ஷாலிமார் பாக், காஷ்மீரின் இரண்டாவது பெரிய மொகலாயத் தோட்டமான நிஷாத் பாக் மற்றும் சஸ்மா ஷாகி மற்றும் பாரி மஹால் உள்ளிட்ட வரலாற்று சிறப்பான முகலாய தோட்டங்களைக் காணலாம். அழகிய படகுகள் , ஷிகாதாரா சவாரி, முகலாய தோட்டங்கள் மற்றும் தால் & நைஜீன் ஏரிகளுக்கு பெயர் பெற்றதாகிறது. இங்கு பார்க்க வேண்டிய முக்கிய மத தலங்களாக ஹஸ்ரத்பால் ஆலயம் , சங்கராச்சாரியார் கோவில் மற்றும் ஜாமியா மஸ்ஜித் மசூதி ஆகியவை உள்ளன. இங்கு உருவாக்கப்படும் தரமான சால்வைகள் மற்றும் விரிப்புகள் கைவினை பொருட்கள் பிரபலமானவை. இங்குள்ள ஆசியாவின் மிகப்பெரிய இந்திரா காந்தி துலிப் தோட்டம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இது ஏப்ரல் மாதத்தில் மட்டுமே திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தச்சிகம் தேசிய பூங்கா போன்ற பல இடங்களைக் கண்டு ரசிக்க ஏற்ற நகரம் இது.

5. யுஸ்மாக் (yusmarg)

yusmarg
yusmarg

காஷ்மீருக்கு செல்பவர்களில் குறைவான நபர்கள் செல்லும் இடமாக இருப்பதில் இதுவும் ஒன்று. காரணம் குளிர் காலத்தில் ஏற்படும்  பனிப்பொழிவு. "இயேசுவின் புல்வெளி" என்று புகழ் பெற்ற இந்த மினி மலை வாசஸ்தலம் தலைநகர் ஸ்ரீ நகரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகள் பாதிக்கப்பட்டு  துண்டிக்கப்படும் அபாயம் உண்டு என்பதால் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் தொலைதூர இடங்களில் மலையேற்ற சாகசம் செய்ய நினைப்பவர்களுக்கு இது ஏற்ற இடமாகிறது. சில கிலோ மீட்டர்களில் உள்ள  நிலா நாக்னேரி என்று அழைக்கப்படும் அழகான ஏரியைக் காணலாம். இங்கு இயற்கை அழகு மற்றும் மழையேற்றம் குதிரை சவாரி போன்றவற்றை அனுபவிக்கலாம். யூஸ்மார்க் வழியாக பாயும் தூத் கங்கா நதி மீன்பிடிக்கும் பிரபலமான இடம். கோடைக் காலத்தில் யுஸ்மார்க்கின் இதமான வானிலை இனிமையான அனுபவத்தை தரும் என்பதால் இந்த நேரம் இங்கு செல்வதற்கு ஏற்றமான காலமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com