
நாங்கள் ஸ்ரீநகர் சென்ற அன்று மாலை டெம்போ டிராவலர் வேன் மூலம் எங்களை துலிப் கார்டனுக்கு அழைத்துச் சென்றார்கள்.
துலிப் காஷ்மீரின் பிரத்யோகமான மலர். துலிப் கார்டன் பொதுமக்கள் பார்வைக்காக ஏப்ரல் மாதம் மட்டுமே திறக்கப்படுகிறது. சுமார் முன்னூறு ஏக்கர் பரப்பளவில் துலிப் கார்டன் பார்க்க ரம்மியமாக இருக்கிறது. உள்ளே நுழைய கட்டணம் உண்டு. என்னவெல்லாம் வண்ணங்கள் இருக்கின்றனவோ அத்தனை வண்ணங்களிலும் துலிப் மலர்கள் காணப்படுகின்றன. துலிப் செடியானது சுமார் ஒன்றரை அடி உயரமே காணப்படுகிறது. பணியாளர்கள், பார்வையாளர்கள் துலிப் மலர்களைத் தொடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் துலிப் கார்டன் முழுவதையும் சுற்றிச்சுற்றி வந்தோம். அங்கிருந்து புறப்படவே மனம் வரவில்லை. துலிப் மலர்களைப் பார்த்து ரசிக்க வேண்டுமென்றால் ஸ்ரீநகருக்கு ஏப்ரல் மாதத்தில் மட்டுமே செல்லவேண்டும். அதன் பின்னர் துலிப் கார்டன் மூடப்படுகிறது.
துலிப் கார்டனைக் கண்டு ரசித்துவிட்டு, அடுத்ததாக மொகல் கார்டனுக்குச் சென்றோம்.