காசி பயணம் போறீங்களா?

இதோ உங்களுக்காக சில டிப்ஸ்...
காசி பயணம் போறீங்களா?

ந்துக்களின் புனித யாத்திரையான காசி பயணம் இராமேஸ்வரத்தில் ஆரம்பித்து காசி பின் இராமேஸ் வரத்தில் முடிக்கவேண்டும். சமீபத்தில் 9.11.22 அன்று தொடங்கி ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்ட அனுபவத்தில் எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்றேன்.

1. ராமேஸ்வரத்தில் கோடி தீர்த்தம் சேர்த்து 22 தீர்த்தங்களை கேனில் சேகரித்துக்கொண்டு அக்னி தீர்த்த மணலையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

2. காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய இராமேஸ்வரம் தீர்த்தம் எடுத்து செல்லும்போது கோவிலுக்குள் சொம்பில் எடுத்துச்செல்ல வேண்டும். பிளாஸ்டிக் கேன் அனுமதியில்லை. கயாவில் சொம்பு வாங்கலாம் அல்லது வீட்டில் இருந்து எடுத்துச் செல்லலாம்.

3. திரிவேணி சங்கமத்தில் உள்ள மண்ணோடு இராமேஸ்வரம் அக்னிதீர்த்த மணலையும் சேர்த்து லிங்கம் பிடித்து வணங்கியபின் நீரில் கரைக்க வேண்டும்.

4. ன நெருக்கடியால் குறைந்த அளவு நகை அணிவது நமக்கு பாதுகாப்பு.

5 விமானத்தில் செல்லும்போது செக்கின்னில் ஒருவருக்கு 15 கிலோவை ஒரே லக்கேஜாக போட்டு விட்டு கையில் எடுத்துச் செல்லும் ஏழு கிலோ லக்கேஜை இரண்டு பைகளாக எடுத்துச்சென்றால் அங்கு சுற்றிப்பார்க்க, தீர்த்தமாட, சிறிய பையை எடுத்துச்செல்ல வசதி. இரண்டு மூன்று கிலோ வெயிட் குறைவாக எடுத்துக் கொண்டால் திரும்பி வரும்போது நாம் வாங்கி வரும் பொருளுக்கும் சேர்த்து வெயிட் சரியாகும். அதிக கட்டணம் தர தேவையிருக்காது.

6. ண்ணீர் பாட்டில்கள் பிளாஸ்க்குகள் தேவையில்லாத சுமை. விமானத்தில் வெந்நீர் கிடைக்கும். கோவில்களில் தண்ணீர் பாட்டில்கள் அனுமதியில்லை.

7. ருமம் செய்ய தேவையான ரூபாய்க்கு இருபது, நூறு என இங்கேயே மாற்றிச் செல்லலாம். கமிஷனுக்கு அங்கும் கிடைக்கிறது. காசி கயாவில் தருமம் கேட்பவர்கள் அதிகம்.

8 யா, காசி திரிவேணி சங்கமத்தில் புத்தாடைகள் தருமம் செய்வது சிறப்பு.

9. காசி தீர்த்தத்தை சீல் செய்த செம்பில் இராமேஸ் வரத்திற்க்கு இராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வாங்கிச்செல்லவேண்டும். இதை மட்டுமே அனுமதிப்பார்கள்.

10. ங்காதீர்த்தம் திரிவேணி சங்கமத்தில் எடுத்து தருகிறார்கள். தரமான கேன்கள், சுத்தமான பாட்டில்களில் செக்கின் லக்கேஜில் எடுத்து வரலாம். ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வரமுடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com