கேரளா டைரி: மார்ச் மாதத்தின் இதமான பயணத்திற்கு 5 சிறந்த மலைப்பகுதிகள்!

Payanam Articles
kerala tourist places

குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் குறைந்த செலவில் அழகான இயற்கையை ரசிக்க விரும்பினால், கேரளாவின் இந்த மலைப் பகுதிகளை கண்டிப்பாக உங்கள் பட்டியலில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இயற்கையின் சொர்க்க பூமியான கேரளாவில் பார்க்க வேண்டிய டாப் 5 அழகிய மலைப்பகுதிகளை இங்கே பார்க்கலாம். இவற்றை பார்க்க  இந்த மார்ச் மாதம் மிக ஏற்றதாக இருக்கும்.

ஏன் மார்ச் மாதம் செல்லவேண்டும்?

மார்ச் மாதம் கேரளாவின் மலைப்பகுதிகளில் அதிக வெப்பம் இருக்காது. காலை மற்றும் மாலை நேரங்களில் குளிர்ந்த காலநிலை இருக்கும். அதனால் நடைபயணம், புகைப்படம், இயற்கை சுற்றுலா போன்றவற்றை நிதானமாக அனுபவிக்க முடியும். மேலும் இந்த காலத்தில் சுற்றுலா கூட்டமும் குறைவாக இருக்கும் என்பதால் அமைதியாக பயணிக்கலாம்.

1. பொன்முடி

Payanam Articles
பொன்முடி

திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள பொன்முடி, மலை சிறியதானாலும் மிகவும் அழகான மலைப்பகுதியாகும். இங்கு உள்ள சுருளும் வட்டமடிக்கும் மலைப்பாதைகள், பசுமையான காடுகள் மற்றும் மேகங்கள் சூழ்ந்த மலைகள் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. மார்ச் மாதத்தில் இங்கு காலநிலை மிகவும் இனிமையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
24 மணி நேர வாடகைக்கு இனி பை பை... பணத்தை மிச்சப்படுத்தும் புதிய ஹோட்டல் ட்ரிக் இதோ!
Payanam Articles

2. வாகமன்

Payanam Articles
வாகமன்

கூட்ட நெரிசல் இல்லாமல் அமைதியான மலைப்பகுதியை தேடுபவர்களுக்கு வாகமன் சரியான இடம். பசுமையான புல்வெளிகள், மெல்லிய மலைச்சரிவுகள் மற்றும் குளிர்ந்த காற்று இங்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை தரும். காடு, மலைப்பகுதிகள் போன்ற இடங்கள் மிகவும் அழகான காட்சிகளை வழங்கும். புகைப்பட ஆர்வலர்களுக்கும் இது ஒரு சிறந்த இடமாகும்.

3. தேக்கடி

Payanam Articles
தேக்கடி

தேக்கடி கேரளாவின் முக்கியமான வனவிலங்கு சுற்றுலா தலமாகும். இங்கு அமைந்துள்ள பெரியார் வனவிலங்கு பூங்கா உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. இங்கு படகு சவாரி செய்யும் போது ஏரிக்கரையில் காட்டு யானைகள், மான், பல்வேறு பறவைகள் போன்றவற்றைக் காணும் வாய்ப்பு கிடைக்கும். இயற்கை மற்றும் விலங்குகளை விரும்புபவர்கள் கண்டிப்பாக தேக்கடியை பட்டியலில் சேர்க்கவேண்டும்.

4. வயநாடு

Payanam Articles
வயநாடு

இயற்கை அழகில் மிதக்கும் மற்றொரு மலைப்பகுதி வயநாடு. அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பழமையான குகைகள் இங்கு உள்ள முக்கிய அம்சங்கள். வயநாட்டில் உள்ள எடக்கல் குகை, பாணாசுர சாகர் அணை, நீர்வீழ்ச்சிகள் போன்ற இடங்கள் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்கள். இயற்கை மற்றும் சாகச சுற்றுலாவை விரும்புவோருக்கு வயநாடு ஒரு சிறந்த இடமாகும்.

5. மூணார்

Payanam Articles
மூணார்

கேரளாவில் மிகவும் பிரபலமான மலைப்பகுதி என்றால் அது மூணார்தான். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலா தலம், பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் குளிர்ந்த காலநிலைக்காக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. மார்ச் மாதத்தில் மூணாரின் காலநிலை மிகவும் இனிமையாக இருக்கும். இங்குள்ள தேசிய பூங்கா, அணை போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் பார்ப்பவை. மேலும் அரிய வகை நீலக்குறிஞ்சி மலர்கள் மலரும் இடமாகவும் மூணார் பிரபலமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com