
கோத்தகிரி, நீலகிரி மலையின் அமைதியான மற்றும் அழகான சூழலுக்கு பெயர் பெற்ற இடமாகும். தென்னிந்தியாவில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது குளிரான காலநிலையைக் கொண்டுள்ள இடம் இது. 'கோட்டா' பழங்குடியின மக்களின் பெயரால் அழைக்கப்படும் இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,793-1,950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பெரிய ஹில் ஸ்டேஷன் ஆகும். (kotagiri tourist places) கோத்தகிரி தேயிலை தோட்டங்கள், மலையேற்றம் (trekking) மற்றும் பாறை ஏறுதலுக்கு(Rock climbing) பெயர் பெற்றது. இங்கு கோடநாடு காட்சிமுனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை காடுகள் ஆகியவை முக்கியமான சுற்றுலா இடங்கள் ஆகும்.
கோத்தகிரியில் இருந்து கூக்கல்துறை செல்லும் சாலையில் கூக்கல் கிராமத்திற்கு அருகில் பசுமையான தாவரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இந்த உயிலட்டி நீர்வீழ்ச்சி. கோத்தகிரியில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அழகான ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சி இயற்கையை ரசித்து புகைப்படங்கள் எடுப்பதற்கு சிறந்த இடமாகும். இது வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வனத்துறை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். மலைக்காற்றின் இதமான தட்பவெப்பநிலை மற்றும் பாறைகளுக்கு இடையே விழும் நீர் என கண்களுக்கு விருந்தளிக்கும் இடம் இது. கூட்ட நெரிசல் குறைவு என்பதால் நிம்மதியாக பொழுதைக் கழிக்கலாம்.
இது புதுமந்து கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் அமைந்துள்ள அருமையான அருவி. ஒரு நாள் பிக்னிக் செல்வதற்கு ஏற்ற இடமாகும். இந்த மயக்கும் நீர்வீழ்ச்சியில் பாறைகளின் பிளவுகள் வழியாக நீர் கீழே விழுவதை அழகாகக் காணலாம். இது கோத்தகிரியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நாம் செல்லும் வாகனங்களை நிறுத்திவிட்டு சுமார் 1-2 கிலோ மீட்டர் தூரம் பசுமையான தேயிலை தோட்டங்கள் வழியாக நடந்து செல்லவேண்டும்.
கோத்தகிரிக்கு அருகில் குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்கா 1874ல் நிறுவப்பட்ட 12 ஹெக்டேர் பரப்பளவுள்ள புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவாகும். இது இயற்கையான பள்ளத்தாக்கில், அரிய வகை மரங்கள், வண்ணமயமான மலர் படுக்கைகள், கண்ணாடி மாளிகை, படகு சவாரி மற்றும் மே மாதங்களில் நடைபெறும் பழக் கண்காட்சி ஆகியவற்றைக் கொண்ட மிக அழகான அதே சமயம் அமைதியான சுற்றுலாத்தலமாகும்.
இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மரங்கள் மற்றும் வெளிநாட்டுத் தாவரங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறும் காய்கறி மற்றும் பழக் கண்காட்சி மிகவும் பிரபலமானது.
கோத்தகிரி மற்றும் குன்னூர் அருகில் உள்ள லாம்ப்ஸ் ராக் பள்ளத்தாக்குகள், தேயிலைத்தோட்டங்கள் மற்றும் மேட்டுப்பாளையம் சமவெளிப் பகுதிகளை காட்டும் ஒரு அற்புதமான இயற்கை காட்சிமுனை (Viewpoint) ஆகும். வானம் தெளிவாக இருந்தால் கேத்தரின் நீர்வீழ்ச்சியையும் இங்கிருந்து காண முடியும். இது குன்னூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில், டால்ஃபின் நோஸ் செல்லும் வழியில் பர்லியார் கிராமத்தில் அமைந்துள்ளது. காலை நேர மூடுபனியைத் தவிர்த்து மதியத்திற்குப் பிறகு செல்வது சிறந்தது.
இது கோத்தகிரியின் ஒரு முக்கியமான அடையாளமாகும். சுமார் 250 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாக விழும் இந்த அழகான நீர்வீழ்ச்சி, பசுமையான காடுகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. கேத்தரின் நீர்வீழ்ச்சி கோத்தகிரியில் காபி தோட்டங்களை அறிமுகப்படுத்திய மைசூர் மாவட்ட ஆட்சியர் ஜி. டி. காக்பர்னின் மனைவி கேத்தரின் நினைவாக இந்த பெயரிடப்பட்டது. டால்பின் நோஸ் பகுதியில் இருந்து இந்த அருவியின் முழு அழகையும் தெளிவாகக் காணலாம்.
அடர்ந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட இந்த காடு, இயற்கையை ரசிப்பவர்களுக்கும், பறவைகளை பார்ப்பவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக திகழ்கிறது. இங்கு பல அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளைக் காணமுடியும்.
கோத்தகிரியில் இருந்து 6 மைல் வடகிழக்கில் அமைந்துள்ள கில் கோட்டகிரி ஒரு வினோதமான கிராமம். தானியங்கி செயல்முறைகளால் தொலைந்து போன தேயிலை தோட்டங்களின் இலைகளை வாட வைப்பது, உருட்டுவது, நொதித்தல் மற்றும் உலர்த்துதல் போன்ற பழைய நடைமுறைகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்ற இடம் இது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் கோத்தகிரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடத்திலிருந்து ரங்கசாமி சிகரம், மாயார் ஆறு, பவானிசாகர் அணை, தேயிலை தோட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள மலைகளின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது.
கோத்தகிரியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உயிலத்தி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி அமைதியான சூழலை விரும்புகிறவர்களுக்கு ஏற்றது. சுமார் 80 அடி உயரத்தில் இருந்து கொட்டும் கண்கவர் நீர்வீழ்ச்சியான இது பசுமையான தேயிலை மற்றும் காபி தோட்டங்களால் சூழப்பட்ட பசுமையான பகுதியில் அமைந்துள்ளது. அருகிலேயே 1819 இல் பிரிட்டிஷ் கலெக்டர் சல்லிவனால் கட்டப்பட்ட பழைய பங்களா உள்ளது.
எப்படி செல்வது?
அருகிலுள்ள ரயில் நிலையம் குன்னூர். அங்கிருந்து டாக்ஸியில் செல்லலாம். ஊட்டியில் இருந்து கோத்தகிரி 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அக்டோபர் முதல் மே மாதம் வரை பார்வையிட சிறந்த நேரமாகும்.