இந்திய வடகிழக்கு மாநிலங்களின் சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வோமா!

அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசம்
Published on

ந்தியாவின் வடகிழக்கு பகுதி எட்டு மாநிலங்களை உள்ளடக்கிய மிகவும் அழகான பகுதியாகும். இதில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, மேகாலயா, மிசோரம் ஆகியவை ஏழு சகோதரிகள் என்றும், சிக்கிம் மட்டும் சகோதரர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாநிலங்களில் உள்ள சுவாரஸ்யமான  விஷயங்களைப் பற்றி காண்போம்.

1. அசாம்: அசாம் உலகின் மிகப்பெரிய மற்றும் சிறிய தீவுகளை கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நதி தீவு அசாமில் உள்ள மஜூலி ஆகும். இது மொத்தம் 352 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது. கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இது காட்சியளிக்கும். இந்த பிரம்மபுத்திரா ஆற்றின் மையப் பகுதியில் அமைந்துள்ள உமானந்தா தீவு உலகின் மிகச்சிறியளவில் மக்கள் வசிக்கும் நதி தீவாக கருதப்படுகிறது. மேலும் இந்த நதி சூரிய சக்தி உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது.

2. அருணாச்சலப் பிரதேசம்: இந்தியாவின் கிழக்கு பகுதியான அருணாச்சலப்பிரதேசம் தான் முதலில் சூரிய உதயத்தை காண்கிறது. இதனால்தான் இது 'உதயசூரியனின் நிலம்' என்றும் அழைக்கப்படுகிறது.

அசாம்...
அசாம்...

3. மணிப்பூர்: மணிப்பூர் எதற்கு பெயர் பெற்றது என்றால், முதலாவது இமா என்னும் சந்தையானது பெண்களால் மட்டுமே இயங்கும் உலகின் ஒரே சந்தையாகும். 16-ஆம் நூற்றாண்டில் மணிப்பூரில் உள்ள இமா மார்க்கெட் பெண்களால் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பெண் விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்கள் தினசரி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வார்கள். இரண்டாவது சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அம்சம் கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்கா. இது உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்கா ஆகும். இது லோக் டாக் ஏரிக்குள் அமைந்துள்ளது.

4. நாகலாந்து: இம்மாநிலம் 'உலகின் அமுர் பால்கன் தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், அமுர் பால்கன் என்ற  பறவையானது ஆசியாவை பூர்விகமாகக் கொண்டது. இது 22,000 கிலோ மீட்டர் வரை பயணித்து, குளிர்காலத்தில் மூன்று முதல் நான்கு வாரங்கள் ஓய்வெடுப்பதற்காக நாகலாந்து வரும். நாகலாந்து இந்த பறவைகளுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குகிறது.

5. மேகாலயா: மேகாலயாவில் கிழக்கு காசி மலைப் பகுதியில் அமைந்துள்ள மவ்சின்ராம் உள்ளது. இது உலகிலேயே மிகவும் ஈரமான இடமாக உள்ளது. மேலும் 'ஆசியாவிலேயே தூய்மையான கிராமம்' ஷில்லாங் இங்கு தான் உள்ளது.

இதையும் படியுங்கள்:
அயராத பணியே மகிழ்ச்சி!
அருணாச்சல பிரதேசம்

6. மிசோரம்: மிசோரம் பசுமையான மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு இருக்கும் புக்கிங் குகையானது உள்ளூர் புராணங்களின்படி, ஒரு ஹெர்பியின் மூலம் செதுக்கப்பட்டது.

7.திரிபுரா: இது வடக்கில் உள்ள ஒரே மிதக்கும் அரண்மனையை பெருமைப்படுத்துகிறது. நீர் மஹால் புகழ்பெற்ற அரச வரலாற்றை கொண்ட ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக உள்ளது.

8. சிக்கிம்: கோவாவிற்கு அடுத்தபடியாக இதுதான் இந்தியாவின் இரண்டாவது சிறிய மாநிலம் ஆகும்.

இத்தகைய இயற்கை வளம் கொண்ட இந்தியாவின் ஏழு சகோதரிகளையும் ஒரு சகோதரரையும் பார்க்க புறப்படுவோமா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com