உலகில் உள்ள 3 கலர்ஃபுல்லான இடங்களைப் பற்றித் தெரிஞ்சிக்கலாம் வாங்க!

Tulip fields netherland
Tulip fields netherlandImage Credits: Vayobo
Published on

ந்த உலகில் பார்த்து ரசிப்பதற்கு மிகவும் அழகான பல இடங்கள் இருந்தாலும், நம் கண்களை கவரக்கூடிய அழகான பல வண்ணங்களைக் கொண்ட இடங்களைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இருக்கும். அத்தகைய அழகு மிகுந்த 3 இடங்களைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

1.Tulip fields, Netherland.

உலகில் மிக புகழ்பெற்ற Holland ல் உள்ள துலிப் மலர் கண்காட்சியை பார்க்க நம்முடைய கண்கள் இரண்டும் போதாது என்றே சொல்லலாம். Bollen streek என்னும் பகுதியில் வருடா வருடம் நடக்கும் இந்த மலர் கண்காட்சியை பார்க்க மிகவும் அற்புதமாக இருக்கும். நம்முடைய ஊரில் உள்ள சூரியகாந்தி தோட்டம் போல இங்கிருக்கும் பலவண்ண துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குவதை பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

Lake Hillier Australia
Lake Hillier AustraliaImage Credits: iStock

2. Lake Hillier, Australia.

ஆஸ்திரேலியாவின் பக்கத்தில் உள்ள ஒரு சின்ன தீவில் அமைந்திருக்கும் உப்புநீர் ஏரிதான் Lake Hillier ஆகும். நீலநிறத்தில் இருக்கும் கடலையும், பச்சை நிறத்திலிருக்கும் மரங்களின் நடுவிலே பிங்க் நிறத்தில் இந்த ஏரி அமைந்திருப்பது கண்களை கவரக்கூடியதாக இருக்கும். இந்த ஏரி பிங்க் நிறத்தில் இருப்பதற்கு காரணம் அதில் உள்ள ஆல்கே, halobacteria and microps களாகும்.

Dead Seaஐ விடவுமே உப்பு இந்த நீரில் அதிகமாக இருந்தாலும் நீந்துவதற்கு பாதுகாப்பான ஏரி என்று சொல்லப்படுகிறது. இந்த ஏரியை ஏரோப்பிளேனிலிருந்து கழுகுப்பார்வையில் பார்வையிடும்போது கண்கொள்ளாக்காட்சியாக இருக்குமாம்.

Bentonite hills USA
Bentonite hills USAImage Credits: The Adventures of Nicole

3. Bentonite hills, USA.

Utah பாலைவனத்திற்கு நடுவிலே இருக்கும் கலர்ஃபுல்லான மலைத்தொடர்தான் Bentonite hills ஆகும். இந்த மலைகளை பார்க்கும்போது பலவண்ண நிறங்களில் வேறு ஏதோ கிரகத்திற்கு வந்தது போல தோன்றுமளவிற்கு இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் அழகிய 3 பறவைகள்!
Tulip fields netherland

இந்த இடம் சேறு, மணல், எரிமலை சாம்பல் போன்றவற்றால் ஜூராசிக் காலக்கட்டத்தில் இருந்து உருவானதாக சொல்லப்படுகிறது. இந்த இடம் 140 மில்லியன் வருடம் பழமையானது என்று கருதப்படுகிறது. இந்த 3 கலர்புல்லான இடங்களில் உங்களை கவர்ந்தது எதுவென்று சொல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com