

நம் இந்திய நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. போக்குவரத்து இடையூறுகளைத் (Traffic problems) தவிர்ப்பது, தேவையான பாதுகாப்பை உறுதி செய்வது என்று அதற்கு தேவையான அனைத்தையும் எப்படி முன்கூட்டியே திட்டமிடலாம்?
1. செய்ய வேண்டிய விஷயங்கள்:
எப்போதும் புறப்படுவதற்கு முன் வாகனத் தயார் நிலைக்கு (vehicle readiness) கண்டிப்பாக முன்னுரிமை அளிக்க வேண்டும். பிரேக்குகள், டயர்கள், எரிபொருள் மற்றும் விளக்குகள்(Lights) சரியாக வேலை செய்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். ஏனென்றால் வாகனத்தில் வரும் இயந்திர சிக்கல்கள்(mechanical issues) எதிர்ச்சியாக வரும் தாமதங்களை இன்னும் மோசமாக்கும்.
அதேபோல் புறப்படும் நேரங்களை (departure times) முன்கூட்டியே திட்டமிடுவது மிகவும் முக்கியமானது. அதிகாலை அல்லது மாலை நேரங்கள் பெரும்பாலும் சாலையில் ஏற்படும் உச்ச நெரிசலைத் (peak congestion) தவிர்க்க உதவுகின்றன. இதோடு தண்ணீர், சிற்றுண்டி மற்றும் முதலுதவி பெட்டி (First aid kid) போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வது, எதிர்பாராத டிராபிக் நேரங்களில் நம் பாதுகாப்பிற்கு கை கொடுக்கலாம்.
2. டிராபிக் பற்றி எப்படி முன்கூட்டியே அறியலாம்:
சம்பந்தப்பட்ட சாலையில் பயணிக்கும் முன் அங்கு நிகழும் போக்குவரத்து நிலைமைகள் குறித்து முன்கூட்டியே அறிய இந்தியாவில் பல வசதிகள் இருக்கின்றன. கூகுள் மேப்ஸ் (Google Maps), மேப் மை இந்தியா (MapMyIndia) போன்ற வழிகாட்டி செயலிகள் போக வேண்டிய பாதையில் இருக்கும் போக்குவரத்து நிலைமைகள், அதற்கு தேவையான மாற்று வழிகள் மற்றும் நாம் எப்போது சேருவோம், போன்ற பயண நேரங்களையும் வழங்குகின்றன.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways (MoRTH), மாநில போக்குவரத்து காவல் துறைகள் கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக சேனல்கள் வழியாக அந்தந்த இடங்களில் நிகழும் போக்குவரத்து நிலவரங்களைத் தெரிவிக்கின்றன.
இதோடு வானொலி ஒலிபரப்புகள் (Radio broadcasts) குறிப்பாக பெருநகரங்களில் உள்ள FM நிலையங்கள், போக்குவரத்து நிலவரங்கள் பற்றிய எச்சரிக்கைகளை இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. கூடுதலாக பல சுங்கச்சாவடிகள் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் இப்போது டிராபிக் நெரிசல் எச்சரிக்கைகள், அதற்கான திசை திருப்பல்கள்(diversions) மற்றும் விபத்து ஏற்பட்ட அறிவிப்புகளைக் காட்ட (Variable Message Sign Boards (VMS) போன்ற அடையாளப் பலகைகளை பயன்படுத்துகின்றனர்.
3. டிராபிக்கில் மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்:
முன்னெச்சரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் சில திடீர் போக்குவரத்து நெரிசல்கள் நம்மால் தவிர்க்க முடியாதவைதான். இதுபோன்ற சூழ்நிலைகளில் முக்கியமானது மன தயார்நிலை, தகவமைப்புத் திறன் (mental preparedness and adaptability). இந்நேரங்களில் முதலில் ஓட்டுநர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வாகனத்தை வேகமாக திரும்புவதைத் தவிர்க்க வேண்டும் (avoid aggressive lane switching). மன அழுத்தம் மற்றும் விபத்துகளைக் குறைக்க முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடையில் பாதுகாப்பான தூரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் (keep safe distances).
தேவைப்பட்டால் உங்கள் காத்திருப்பு நேரத்தை (waiting time) ஒரு பொழுதுபோக்கு நேரமாக மாற்றிக் கொள்ளலாம். பாட்காஸ்ட்கள் (podcasts), இசை அல்லது (audiobooks) கேட்பது, அந்நேரங்களில் ஏற்படும் விரக்தியைக் குறைக்கும். மேலும், இந்த டிராபிக் தாமதம் நீடித்தால் எரிபொருளை சேமிக்க வாகனத்தின் என்ஜினை ஆப் செய்துவிடலாம்.
பின் ஆரோக்கியத்தைக் காக்க, பயணிக்கும் அனைவரும் நீரேற்றத்துடன் (Stay hydrated) இருக்க வேண்டும். குழந்தை களுக்கு அசௌகரியம் ஏற்பட்டால் அவர்களை விளையாட்டுகள் அல்லது கதைகளில் ஈடுபடுத்துவது, அந்நிலைமையைக் கொஞ்சம் அமைதியாக நிர்வகிக்க உதவலாம்.