

முதல் நாள் 22.08.2026
சென்னை சென்ட்ரலில் இருந்து 22.08.26 அன்று இரவு 11.35 மணிக்கு அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் மூலம் மத்திய பிரதேஷ் ஆன்மீகச் சுற்றுலா பயணம் மேற்கொண்டோம். அடுத்த நாள் முழுவதும் 23.08.26 பயணம் செய்து 24 ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு இந்தூர்(Indore) ரயில் நிலையம் சென்றடைந்தோம்.
5 மணி 5 நிமிடங்களுக்குச் செல்ல வேண்டிய ரயில் 45 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது. அங்கிருந்து ஏற்கனவே தயார் நிலையில் இருந்த வேனில் ஏறி பயணம் மேற்கொண்டோம். மலைப்பகுதியில் கோவில் மற்றும் நர்மதா நதி அமைந்துள்ளதால் 2 மணி நேர பயணம் செய்து நாங்கள் தங்கவேண்டிய ஹோட்டலுக்கு வந்தோம்.
நர்மதா நதி:
இந்தியாவின் ஐந்தாவது மிக நீளமான நதியும், தீபகற்ப இந்தியாவில் மேற்கு நோக்கி பாயும் மிக நீளமான நதி தான் இந்த நர்மதா நதி. இது மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள அமர்கண்டக் (Amarkantak) மலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. சுமார் 1,312 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்கிறது.